லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை!. காதலுடன் நடந்த சண்டை!.. ஓவியா லீக் வீடியோவின் பின்னணி!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:16  )

Oviya leak audio: மதயாணைக் கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஓவியா. விமலுடன் நடித்த களவாணி படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். அது கிளிக் ஆகவில்லை. எனவே, இரண்டாவது கதாநாயகியாக மாறினார்.

அது அவருக்கு கை கொடுத்தது. பல படங்களில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று ஒரு கலக்கு கலக்கினார். அந்த நிகழ்ச்சி அவருக்கு ஏராளமான ரசிகர்களை உருவாக்கியது. சமூகவலைத்தளங்களில் ஓவியாவுக்குதான் முதன் முதலில் ஆர்மி உருவாக்கப்பட்டது.

பிக்பாஸ் வீட்டில் ஆரவை காதலித்தார். ஓவியாவுக்கு ஆரவ் முத்தம் கொடுத்ததாகவும் அதை மருத்துவ முத்தம் எனவும் கிண்டலடித்தார் கமல். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா சரியான கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. அதனால், பட வாய்ப்புகள் குறைந்து போனது.

இந்நிலையில்தான், ஓவியா லீக் வீடியோ என்கிற பெயரில் ஒரு ஆபாச வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ஓவியா. அதன்பின் பேருக்கு காவல் நிலையத்தில் ஒரு புகாரும் கொடுத்தார். இந்நிலையில், இந்த வீடியோ பற்றி பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களை சொல்லி இருக்கிறார்.

ஓவியாவின் காதலர் தாரிக். அவர் ஒரு மாடல் கேரளா மற்றும் தமிழகத்தில் மாடலாக இருப்பவர். இருவரும் சில வருடங்கள் லிவ்விங் டூ கெதரில் இருந்தனர். ஓவியா அவரை திருமணத்திற்கு வற்புறுத்தினார். ஆனால், தாரிக் மறுத்தார். இந்த நிலையில்தான் இந்த வீடியோவை தாரிக் வெளியிட்டிருக்க வேண்டும்.

ஓவியாவுக்கு மதுப்பழக்கம் உண்டு. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் மது அருந்துவார். வாழ்க்கையை அனுபவித்து ஜாலியாக வாழ வேண்டும் என ஆசைப்படும் பெண் அவர். அதனால்தான், அவரின் கேரியர் இப்படி ஆகிவிட்டது. மதுவிலிருந்து மீண்டுவிட்டதாக அவர் சொல்லி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படும் நிலையில்தான் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது’ என சொல்லி அதிர வைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும், நான் ஒரு பள்ளியில் குட் டச் பேட் டச் மற்றும் செக்ஸ் கல்வி பற்றி பேசியிருக்கிறேன். வேண்டுமானால் இந்த வீடியோவை செக்ஸ் கல்விக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என சொல்லி இருக்கிறார் ஓவியா. இது அவரின் பெருந்தன்மை என்றாலும் ஆபாச வீடியோ எப்படி செக்ஸ் கல்விக்கு பயணளிக்கும் என்பதை ஓவியாதான் விளக்க வேண்டும் என கேட்டிருக்கிறார் பயில்வான்.

Next Story