காஞ்சனா 4 படத்தில் இணைந்த பிரபல சீரியல் நடிகை.. ஹீரோயின் லிஸ்ட் கூடிக்கிட்டே போகுதே..!

Raghava Lawrence: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய ராகவா லாரன்ஸ் அதன் பிறகு ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கினர். பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறிய ராகவா லாரன்ஸ் மக்களுக்கு பிடித்த வகையில் ஹாரர் திரைப்படங்களை இயக்கி வந்தார்.
காஞ்சனா திரைப்படம்: முனி திரைப்படத்தின் மூலமாக தொடர்ந்து பேய் படங்களை இயக்கி வந்த ராகவா லாரன்ஸ். அதற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக காஞ்சனா என்கின்ற திரைப்படத்தை இயக்கினார். 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்து இந்த திரைப்படத்தின் பாகங்களை இயக்கத் தொடங்கினார்.
காஞ்சனா படத்தின் பாகங்கள் : 2015 ஆம் ஆண்டு காஞ்சனா 2 திரைப்படத்தை இயக்கிய ராகவா லாரன்ஸ், 2019 ஆம் ஆண்டு காஞ்சனா 3 திரைப்படத்தை இயக்கினார். கடைசியாக வெளியான காஞ்சனா 3 படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் பென்ஸ் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கிடையில் காஞ்சனா 4 திரைப்படத்தின் அப்டேட்டும் வெளிவந்தது.
காஞ்சனா 4 திரைப்படம்: தொடர்ந்து காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களையும் ராகவா லாரன்ஸ் இயக்கி வந்த நிலையில் காஞ்சனா 4 திரைப்படத்தையும் ராகவா லாரன்ஸ் தான் இயக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருப்பதாகவும், மேலும் பாலிவுட் நடிகை நேரா பதேகி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் காஞ்சனா 2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வினியோகித்திருந்த நிலையில் காஞ்சனா 3 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனால் காஞ்சனா 4 திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப் போகின்றது என்று எதிர்பார்த்த நிலையில் பட்ஜெட் பிரச்சினை காரணமாக மும்பையை சேர்ந்த கோல்டு மைன்ஸ் என்கின்ற நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றது.
கதாநாயகிகள்: காஞ்சனா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இருந்தே ராகவா லாரன்ஸ் நடிகைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பார். மொத்தம் மூன்று பாகங்கள் வெளியான நிலையில் இந்த மூன்று பாகங்களிலும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல நடிகைகள் நடித்திருந்திருந்தனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே இரண்டு நடிகைகள் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகையான ஹீமா பிந்து படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சீரியலிலும் அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இலக்கியா என்ற சீரியலிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.