பிரேம்ஜி-க்கு விவகாரத்தா?.. 50 வயசுல 22 வயசு பொண்ணு கேட்குதா?.. வெளுத்து வாங்கிய பிரபலம்..

Published on: March 18, 2025
---Advertisement---

நடிகர் பிரேம்ஜி: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகனாகவும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி என்கின்ற அடையாளத்திலும் அறிமுகமானவர் நடிகர் பிரேம்ஜி. ஆரம்ப காலகட்டத்தில் தனது அண்ணனின் பெரும்பாலான படங்களில் நடித்து வந்த பிரேம்ஜி தமிழ் சினிமாவில் சில படங்களில் பாடல்களையும் பாடி இருக்கின்றார்.

45 வயதை தாண்டிய நிலையிலும் முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜி திடீரென்று இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருத்தணியில் இவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பிறகு ஜாலியான ஜோடியாக வலம் வருகிறார்கள் பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதியினர்.

சமீபத்திய பேட்டியில் கூட பிரேம்ஜியின் மனைவி இந்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்த திருமணத்தில் தனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, தம்பி என யாருக்கும் விருப்பம் கிடையாது. திருமண புகைப்படத்தில் கூட அவர்கள் நிற்கவில்லை, எடிட் செய்து தான் இணைத்தோம். என் தம்பி பிரேம்சியுடன் பேசக்கூட விரும்புவதில்லை. பிரேம்ஜி சென்று பேசு முயற்சித்தால் கூட அவர் பேசுவதில்லை. இதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

விரைவில் அனைத்துமே சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களின் திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் பிரேம்ஜியை கண்டபடி விளாசி தள்ளி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘ஒரு பெற்றோர் தனது மகளை எப்படிப்பட்ட ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புவார்கள்.

பாசமாக 22 வருடம் வளர்த்த மகளை இப்படி ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க யாருக்காவது விருப்பம் இருக்குமா? அதிலும் வயது வித்தியாசம் 15. இப்படிப்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னால் எந்த பெற்றோர் முதலில் ஏற்றுக்கொள்வார்கள். காதலித்தோம் என்பதற்காக திருமணம் செய்கிறோம் என்கிறார்கள். காதல் இன்றைய காலகட்டத்தில் நன்றாக இருக்கும்.

இந்த பெண்ணுக்கு 40 வயது ஆகும் போது பிரேம்ஜிக்கு 65 வயது ஆகிவிடும். எப்படி அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஒரு மனிதனின் வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பே முடிந்து விட்டால் எப்படி இருக்கும். பிரேம்ஜி மட்டுமல்ல பலரும் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள். அப்பா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை வைத்துக் கொண்டு ஜாலியாக செலவு செய்து இளமை வயதில் குடி, கூத்து, பெண்கள் என இருந்து விட்டு காலம் போன கடைசியில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

பிரேம்ஜி திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணின் குடும்பத்தார் சொத்துக்க ஆசைப்படுவதாக இருந்திருந்தால் யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டு போகட்டும் என்று இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் நல்ல குடும்பமாக இருப்பதால்தான் மகளை நினைத்து வருந்துகிறார்கள். அந்த பெண்ணின் தம்பிக்கு பிரேம்ஜி குறித்து நன்றாக தெரிந்திருக்கின்றது.

இந்த திருமணத்தை அவர் ஏற்கவில்லை, அக்காவின் வாழ்க்கை இப்படி பாலாகி விட்டதே என்று எண்ணின் வருத்தப்படுகின்றார். இவர் தொடர்ந்து குடியும் கூத்துமாக இருந்து வந்தால் அந்த பெண்ணும் எத்தனை நாள் பொருத்து வாழ்வார். நிச்சயம் ஒரு நாள் விவாகரத்து என்கின்ற முடிவு வரும்’ என்று பேசி இருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment