அந்த பயம் இருக்கணும்!.. வேட்டையன் முதல் நாள் வசூலை அறிவிக்காத லைகா!.. விஜய் ரசிகர்கள் சரவெடி!..

Published on: November 7, 2024
---Advertisement---

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. முதல் பாதி படம் நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதியில் இயக்குனர் கோட்டை விட்டுவிட்டார் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

விஜய் ரசிகர்கள் ஒரு படி மேல் சென்று வேட்டையன் படம் டிசாஸ்டர் எனத் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களின் கொட்டத்தை அடக்கும் என பெரும் கனவு கண்டு கொண்டிருந்த ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஆயுத பூஜை அதிகமாக அவல் பொரிகடலை மட்டுமே லைக்கா நிறுவனம் கொடுத்துள்ளது.

வேட்டையன் திரைப்படம் வெற்றி நடை போடுகிறது மக்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வந்து ஹவுஸ்ஃபுல் ஆக்கி வருகின்றனர். அமிதாபச்சன் பிறந்த நாளுக்கான ஸ்பெஷல் வீடியோ என தொடர்ந்து வேட்டையின் தொடர்பாக ஏகப்பட்ட ட்வீட் களைப் போட்டு வரும் லைக்கா நிறுவனம் இரவு நேரம் ஆன நிலையிலும் இன்னமும் முதல் நாள் வசூல் அறிவிப்பை வெளியிடாததை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்றி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்துக்கு முதல் நாளை 80 கோடி ரூபாய் வசூல் என அறிவித்த லைக்கா நிறுவனம் தற்போது வேட்டையன் படத்துக்கு அறிவிக்காதது ஏன் என்றும் லால் சலாம், இந்தியன் 2 வரிசையில் மிகப்பெரிய நஷ்டத்தை வேட்டையின் திரைப்படமும் கொடுத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகின்றனர்.

தளபதி 69 படத்துக்கும் 2026 ஆம் ஆண்டு வரும் தேர்தலுக்கும் இதற்கெல்லாம் பதிலடி கொடுப்போம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை எச்சரித்து வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment