முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ!.. செம அப்டேட் இதோ!...

by சிவா |
முருகதாஸ் - சிவகார்த்திகேயன் பட டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ!.. செம அப்டேட் இதோ!...
X

ARM & SK: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் தீனா. இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில்தான் அவரை மகாநதி ஷங்கர் முதன் முதலில் ‘தல’ என அழைத்தார். பின்னாளில் அஜித்தை ரசிகர்கள் அப்படியே அழைத்தார்கள்.

அதன்பின் கஜினி, ரமணா என கவனிக்கத்தக்க படங்களை இயக்கினார் முருகதாஸ். மேலும், சூர்யாவை வைத்து ஏழாம் அறிவு, விஜயை வைத்து துப்பாக்கி போன்ற படங்களை இயக்கினார். இதில், துப்பாக்கி திரைப்படம் தேசிய அளவில் கவனிக்கப்பட்டது. இந்த படம் ஹிந்தியில் அக்‌ஷர் குமார் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது.

மகேஷ்பாபு வைத்து ஸ்பைடர் என்கிற படத்தை இயக்கினார். தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் ஓடவில்லை. அதன்பின் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. இப்படி ஏ.ஆர்.முருகதாஸுக்கு இறங்கு முகம் உண்டானது.

பெரிய நடிகர்கள் அவரின் கதையில் நடிக்க யோசித்தார்கள். ஆனால், தனக்கு துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை கொடுத்தவர் என்பதால் மீண்டும் விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், முருகதாஸ் சொன்ன கதை அவருக்கு பிடிக்கவில்லை. ஒருபக்கம், சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுப்பதாக சொன்ன சம்பள விஷயத்திலும் முருகதாஸுக்கு அதிருப்தி இருந்தது. எனவே, அந்த படத்திலிருந்து முருகதாஸ் விலகிவிட்டார்.

அதன்பின் சில வருடங்கள் அவர் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. சிவகார்த்திகேயனே அவரை அழைத்து ‘உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என சொல்ல ஒரு படம் துவங்கப்பட்டது. பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், ஹிந்தியில் சல்மான்கானை வைத்து சிக்கந்தர் எனும் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால் எஸ்.கே. படத்தை பாதியில் விட்டுவிட்டு ஹிந்திக்கு போனார் முருகதாஸ்.

சிவகார்த்திகேயனும் அமரன் படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். சிக்கந்தர் படம் மார்ச் மாதம் முடிவடையும் என்பதால் அதன்பின் சிவகார்த்திகேயன் படத்தின் மீதி காட்சிகளை முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்நிலையில், 17ம் தேதியான நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என முருகதாஸ் தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். எனவே, இந்த படத்தின் தலைப்பு என்ன என்பது நாளை காலை 11 மணிக்கு தெரிந்துவிடும்.

Next Story