Connect with us

சோபிதா துலிபாலாவுடன் தான் நடிப்பீங்களா!.. சமந்தா கொக்கிப் போட்டதும் சிக்கிய பாலிவுட் நடிகர்!..

latest news

சோபிதா துலிபாலாவுடன் தான் நடிப்பீங்களா!.. சமந்தா கொக்கிப் போட்டதும் சிக்கிய பாலிவுட் நடிகர்!..

தி நைட் மேனேஜர் எனும் இந்தி வெப்சீரிஸில் ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர் மற்றும் சோபிதா துலிபாலா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்தனர். அந்த வெப்சீரிஸ், பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட சோபிதா துலிபாலா அந்த வெப்சீரிஸில் வயதான நடிகரான அனில் கபூருடன் ஒட்டி ஒரசி, லிப் லாக் முத்தக் காட்சிகளில் தாராளம் காட்டி நடித்திருந்தார்.

மும்பையில் தொடர்ந்து முகாமிட்டு வரும் சமந்தா எப்படியாவது பாலிவுட் படத்தில் நடித்து விட வேண்டும் என முயற்சித்து வந்த நிலையில், தற்போது அவர் சோபிதா துலிபாலா இணைந்து நடித்த அனில் கபூருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை ஒரு வழியாக பெற்றுள்ளார்.

ஆனால், இது பட வாய்ப்பு எல்லாம் கிடையாது. அதே போல புது வெப்சீரிஸ் சான்ஸும் இல்லை. ஐசிஐசிஐ விளம்பரத்தில் தான் தற்போது சமந்தாவும் அனில் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். நடிகை சமந்தாவுக்கு மையோசைடிஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதும் அடிபட்டு விட்டன.

தொடர்ந்து பல மணி நேரங்கள் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மும்பையில் விளம்பரங்களில் நடிக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கடைசியாக அவர் தயாரித்து கேமியோ ரோலில் நடித்த சுபம் திரைப்படம் பெரிதாக ஓடாத நிலையில், சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.

நயன்தாராவுக்கு பாலிவுட்டில் அட்லீ வாய்ப்பு கொடுத்தது போல, சமந்தாவுக்கு அல்லு அர்ஜுன் படத்தில் வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சான்ஸை ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறி வந்து நைஸாக தீபிகா படுகோன் தட்டித்தூக்கிவிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top