தனுஷ் அந்த மாதிரி ஆளுன்னு நீ போயி பார்த்தியா!.. சுசித்ராவை விளாசிய பிரபல நடிகை.. யாருன்னு பாருங்க!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 11:05:35  )
Suchitra, Dhanush
X

Suchitra, Dhanush

நடிகர் தனுஷ் ஓரினச்சேர்க்கையாளர் என தொடர்ந்து சுசித்ரா பேசி வருவது சரியான விஷயம் கிடையாது என்றும் தனுஷ் கே செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது சுசித்ரா நேரில் சென்று பார்த்தாரா? என்கிற கேள்வியே நடிகை சஞ்சனா சிங் சமீபத்தில் அளித்த பேட்டியில் எழுப்பியுள்ளார்.

சுசித்ராவைப் போல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து பற்றி பேசி வருவது தவறான ஒன்றுதான் என்று சஞ்சனா சிங் கூறியுள்ளார். வைரமுத்து தவறாக நடந்து இருந்தால், அப்போதே அவர் மீது புகார் அளித்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு தனது திருமணத்திற்கு எல்லாம் வைரமுத்துவை அழைத்து ஆசிர்வாதம் வாங்கி சிரித்து பேசிக் கொண்டிருந்த விட்டு அதன் பின்னர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என தொடர்ந்து பேசி வருவது சரியல்ல என சஞ்சனா கூறியுள்ளார்.

பாடகிகள் ஆன சுசித்ரா மற்றும் சின்மயி இருவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக மட்டுமே தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வருவதாகவும், அதிலும் சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுவதை போல தேவையற்ற திணிப்புகளையும் மற்றவர்கள் பேசும் கிசுகிசுக்களை வைத்து இவரே கதை கட்டி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் தவறு செய்தார் என்றால் அவரை மட்டுமே சுசித்ரா குற்றவாளியாக ஆக்கியிருக்க வேண்டும் அதை விட்டு தனுஷ் மீது தேவையற்ற பழியை சுமத்தியுள்ளார். தனுசை பலமுறை நான் சந்தித்துள்ளேன். வெளிநாடுகளில் நடந்த பார்ட்டிகளிலும் அவரைப் பார்த்திருக்கிறேன் சுசித்ரா சொல்வது போல மோசமான ஆள் கிடையாது தனுஷ். எப்போதுமே ஜென்டில்மேனாகத்தான் இருப்பார் என்றும் சஞ்சனா சிங் அந்தப் பேட்டியில் பேசியுள்ளார்.

நடிகை சஞ்சனா சிங் ரேணிகுண்டா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கோ, ரகளபுரம், அஞ்சான், மீகாமன், தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டிக்டாக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Next Story