Connect with us

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!. டைட்டிலே செமயா இருக்கே!….

latest news

செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!. டைட்டிலே செமயா இருக்கே!….

lvaraghavan: துள்ளுவதோ இளமை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் செல்வராகவன். காதல் கொண்டே, புதுப்பேட்டை என அதிரடியான படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். புதுப்பேட்டை பார்த்துவிட்டு மணிரத்னமே இவரை ஸ்டன்னிங் இயக்குனர் என பட்டம் கொடுத்தார்.

ஆயிரத்தில் ஒருவன்:

செல்வராகவனும் தனுஷும் இணைந்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றினார்கள். செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் பெரிய வெற்றிப்படம் இல்லை என்றாலும் ரசிகர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என பல வருடங்களாக ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

அதேபோல், செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இறுதிக்காட்சி பலரையும் பாதித்தது. அந்த படங்களுக்கு பின் செல்வராகவனுக்கு இதுவரை ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைக்கவில்லை. அவர் இயக்கிய இரண்டாம் உலகம், என்.ஜி.கே போன்ற படங்கள் தோல்விப்படங்களாக அமைந்தது.

gv prakash

சினிமாவில் நடிகர்:

கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார் செல்வராகவன், பீஸ்ட், சாணி காயிதம், ராயன் என தொடர்ந்து நடிப்பில் கலக்கி வருகிறார். செல்வராகவனின் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர்தான் ஜிவி பிரகாஷ்.

இருவரும் நல்ல நண்பர்கள் கூட. செல்வராகவனின் தம்பி தனுஷுக்கும் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில், செல்வராகவனும், ஜிவி பிரகாஷும் 13 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையவுள்ளனர். செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.

அதோடு அந்த படத்தை தயாரிப்பதோடு அவரே இசையமைக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘மெண்டல் மனதில்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 6.3௦ மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top