Connect with us

சூர்யா, வெற்றிமாறன் இடையே மீண்டும் பஞ்சாயத்தா? அப்போ 70 கோடியை விழுங்கிய வாடிவாசலின் கதி?!

latest news

சூர்யா, வெற்றிமாறன் இடையே மீண்டும் பஞ்சாயத்தா? அப்போ 70 கோடியை விழுங்கிய வாடிவாசலின் கதி?!

கங்குவா படத்தை முடித்த கையோடு வாடிவாசல் நடித்து விட நினைத்த சூர்யாவுக்கு அப்போது விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் பிசியாக இருந்தார். அதனால் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு ரெட்ரோ படத்தில் நடித்து விட்ட சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போது வெற்றிமாறன் வாடிவாசல் படப்பணிகளை முடுக்கி விட்டுள்ளார். படத்திற்கான லொகேஷன்களை எல்லாம் மதுரையில் பார்த்து வருகிறார்களாம். படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். அவருடன் இணைந்து பேசி வருகிறார் வெற்றிமாறன்.

சி.சு.செல்லப்பா எழுதிய குறுநாவல் தான் வாடிவாசல் படமாக வெற்றிமாறன் எடுத்து வருகிறார். ஒரு பண்ணையாரின் மாடை ஒருவரால பிடிக்க முடியாமல் போகுது. இதனால் தனது மகனை எப்படியாவது பிடித்து விடுன்னு சொல்றாரு. இதையே டெவலப் பண்ணி தன்னோட ஸ்டைல்ல வெற்றிமாறன் எடுக்கிறார்.

கலைப்புலி தாணுவும் இந்தப் படத்தைத் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறார். சூர்யா இந்தப் படத்துக்காகவே காளைகளுடன் பழகினார். சமீபத்தில் சூர்யா, வெற்றிமாறன் இடையே கருத்து வேறுபாடு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சூர்யா பௌன்டட் ஸ்கிரிப்ட் கேட்டாராம். வெற்றிமாறன் கொடுக்க மறுத்தாராம்.

அமீரும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் படத்தில் வில்லன் வேடம். ஆனால் ஹீரோவுடன் தொடர்ச்சியாக டிராவல் பண்ற கேரக்டராம். அமீரை வாடிவாசல் படத்துல கொண்டு வர என்ன காரணம்னா வெற்றிமாறன் வடசென்னையில் அவருக்குக் கொடுத்த கேரக்டரை அவர் அதையும் தாண்டி சிறப்பாகச் செய்தாராம்.

லண்டன்ல இந்தப் படத்துக்காக ஏஐ வேலை கூட நடந்து வருகிறதாம். வாடிவாசல்ல தனுஷ், சிம்பு நடிக்க வாய்ப்பு இல்லை. வடசென்னை 2ல தான் சிம்பு நடிக்கப் போறாராம். தனுஷூக்கு நிறைய படங்கள் வரிசையாக உள்ளதால் அவருக்கும் வாய்ப்பு இல்லை. வடசென்னை 2 படத்துல சிம்பு நடிப்பதற்கு தனுஷே ஓகே சொல்லிவிட்டாராம்.

கலைப்புலி தாணுவுக்கு இதுவரை 70 கோடி வரை செலவாகிவிட்டதாம். இனி சும்மா செலவு பண்ண முடியாது என்றும் சொல்லிவிட்டாராம். வாடிவாசல் படத்தில் சிம்பு, தனுஷ், சூர்யா என யார் ஹீரோவாக நடித்தாலும் அது வெற்றிமாறனின் படமாகவே இருக்கும்.

தொடர் தோல்விகளைச் சந்தித்த சூர்யாவுக்கு வாடிவாசல்தான் ஒரு வெளிச்சத்தைத் தந்து வெற்றியைக் கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இதுவும் கைநழுவிப் போய்விடக்கூடாது என்பதே ரசிகர்களின் எண்ணம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top