Connect with us

மணிமேகலை சண்டை போட்டது என்ன பெருசு!.. பிரியங்காவோட நான் போடாத சண்டையா?.. தாமரைச்செல்வி தாறுமாறு!..

latest news

மணிமேகலை சண்டை போட்டது என்ன பெருசு!.. பிரியங்காவோட நான் போடாத சண்டையா?.. தாமரைச்செல்வி தாறுமாறு!..

பிக் பாஸ் வீட்டில் தனக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் அதிகளவிலான சண்டை வெடித்ததாக தாமரைச்செல்வி பிக் பாஸ் ப்ரோமோவில் பேசியுள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளினி மணிமேகலை இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து தான் வெளியேறுவதாகவும் தனக்கு தன்மானம் ரொம்ப முக்கியம் என மணிமேகலை போட்ட பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ள நிலையில், அதனை முன்னிட்டு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை விஜய் டிவி உருவாக்கியுள்ளது. நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி 6:00 மணிக்கு ஒளிபரப்பாக முன்னதாக விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயக்குமார், கூல் சுரேஷ், ஆர்த்தி, சனம் ஷெட்டி, தாமரைச்செல்வி உள்ளிட்ட பல முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். தாமரைச்செல்வி பேசும்போது தனக்கும் பிரியங்காவும் பிக் பாஸ் வீட்டில் பலமுறை சண்டை வந்துள்ளதாகவும் ஆனால் தற்போது தனக்கு கிடைத்துள்ள இடத்தைப் பார்த்து பெருமையாக பேசியது பிரியங்கா தான் என்றும் தன்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அவர் இருந்துள்ளார் என தாமரைச்செல்வி கூறியுள்ளார்.

உடனடியாக இதை ஒரு வீடியோவாக வெளியிடலாமே என குரேஷி பேசிய புரமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் குரேஷி சரியான பிரியங்கா சொம்பு என கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சி சூப்பராக இருக்கும் போல தெரிகிறது என ரசிகர்கள் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் கலகலப்பான நிகழ்ச்சியை கண்டு ரசிக்க காத்திருக்கின்றனர்.

ஆக மொத்தத்தில் ஒவ்வொரு செட்டிலும் கத்துவதும் போட்டியாளர்களுடன் சண்டை போடுவதும் தான் பிரியங்காவின் குணமாக இருக்கிறது என்பதை தாமரை மறைமுகமாக போட்டு உடைத்துள்ளார் என்றும் மணிமேகலை ஃபேன்ஸ் கூறி வருகின்றனர். நாளை ஒளிபரப்பாகும் புதிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் சர்ச்சை வெடிக்க காத்திருக்கிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top