Connect with us

ரெட்ரோ நிலைமைதான் தக் லைப்புக்கும்!.. விண்வெளி நாயகனுக்கு இப்படி ஒரு சோதனையா?…

latest news

ரெட்ரோ நிலைமைதான் தக் லைப்புக்கும்!.. விண்வெளி நாயகனுக்கு இப்படி ஒரு சோதனையா?…

Thug life: சினிமாவில் எந்த நடிகருக்கு எந்த நடிகரின் படம் பிரச்சனையாக வரும் என கணிக்கவே முடியாது. 80களிலெல்லாம் ஒரே நாளில் எல்லா முன்னணி நடிகர்களின் படங்களும் ஒன்றாக வெளியாகும். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, மோகன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களும் ஒன்றாக வெளியாகி எல்லோரின் படங்களும் வசூலை அள்ளும்.

அதற்கு காரணம் தமிழகத்தில் அப்போது நிறைய தியேட்டர்கள் இருந்தது. ஒவ்வொரு சின்ன ஊரிலும் கூட பல தியேட்டர்கள் இருந்தது. அதனால், ஒரே நாளில் பல படங்கள் வெளியானாலும் எல்லாவற்றுக்கும் தியேட்டர்கள் கிடைத்தது. அதோடு, அப்போது சினிமா மட்டுமே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. தொலைக்காட்சிகளின் அசுர வளர்ச்சி அப்போது இல்லை.

ஆனால், எப்போது டிவி சீரியல்கள் வந்ததோ அப்போதே பெண்கள் தியேட்டருக்கு போவதை குறைத்துவிட்டார்கள். பல பெண்கள் தியேட்டர் பக்கமே போவது இல்லை. அதோடு, குடும்பத்தோடு சென்று படம் பார்க்கும் எண்ணிக்கையும் பரவலாக குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் இளைஞர்கள் கூட்டமே அதிக அளவில் படம் பார்க்க தியேட்டருக்கு வருகிறார்கள்.

அதோடு, பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலும் கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது. அது ரஜினி, கமல் படங்களாக இருந்தாலும் சரி. வசூல் மன்னன், சூப்பர்ஸ்டார் என சொல்லப்பட்ட ரஜினியே பல வருடங்களுக்கு பின் ஜெயிலர் ஹிட் கொடுத்தார். கமலுக்கு இந்தியன் 2 மண்ணை கவ்வியது.

இப்போது வெளியாகியுள்ள தக் லைப் படமும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியானபோது சசிக்குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படமும் வெளியானது. இதில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. படம் வெளியாகி 3 நாளில் ரெட்ரோவுக்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டு டூரிஸ்ட் ஃபேமிலிக்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ரெட்ரோ படம் தோல்வி அடைந்தது.

இப்போது இதே நிலைமைதான் தக் லைப் படத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. இந்த படத்தோடு மெட்ராஸ் மேட்னி என்கிற சின்ன பட்ஜெட் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறவே தக் லைப்புக்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டு மெட்ராஸ் மேட்னிக்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top