கோட் டிரெய்லருக்கு ஆப்பு வைக்கும் உதயநிதி!.. இவங்க பஞ்சாயத்து முடியாது போல!..

by ராம் சுதன் |

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நுழைய ஆர்வம் ஏற்பட்டு ரெட் ஜெயண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். அவர் தயாரித்த முதல் படமே விஜய் நடித்த குருவிதான். தரணி இயக்கத்தில் விஜயுடன் திரிஷா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் உருவாகும்போதே உதயநிதிக்கும், விஜய்க்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

எனவே, அதன்பின் உதயநிதி விஜயை வைத்து படம் தயாரிக்கவே இல்லை. உதயநிதி பலமுறை முயன்றும் விஜய் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை. எனவே, மற்ற நடிகர்களை வைத்து படங்களை தயாரித்தது ரெட் ஜெயண்ட் நிறுவனம். மேலும், பல படங்களை வினியோகம் செய்து வருகிறது.

கடந்த 3 வருடங்களாகவே திரையுலகில் வெளியாகி வரும் பல முக்கிய படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனமே வெளியிட்டு வருகிறது. விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தையும் இந்நிறுவனமே வெளியிட்டது. விஜய் இப்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படத்தின் சில போஸ்டர்களும், 3 பாடல்களும் இதுவரை வெளியாகியுள்ளது. போஸ்டர்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் பாடல்கள் அந்த அளவுக்கு ரீச் ஆகவில்லை. அதற்கு காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இசை ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை.

வழக்கமாக விஜய் படம் வெளியாகும் முன் அப்படத்தில் இசை வெளியீட்டு விழா வெளியாகும். அந்த விழாவில் விஜய் பேசுவது பேசுபொருளாக மாறும். அதுவே அந்த படத்திற்கு விளம்பரமாகவும் அமையும். ஆனால், கோட் படத்திற்கு இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என படக்குழு முடிவெடுத்திருக்கிறது.

அதேநேரம், ஆகஸ்டு 19ம் தேதி கோட் படத்தின் டிரெய்லர் வீடியோவை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அதே தேதியில் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் கவனம் உதயநிதி பக்கம் சென்றுவிடும்.

வழக்கமாக விஜய் படம் தொடர்பான அப்டேட் வெளிவரும் நாளில் அஜித் தொடர்பாக ஒரு செய்தி வெளியாகும். எனவே, ஆகஸ்டு 19ம் தேதி உதயநிதி தொடர்பான செய்தி வராமல் போனாலும் அஜித் தொடர்பான செய்தி வெளியாகும் என சொல்லி சிரிக்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story