Connect with us

ஃபர்ஸ்ட் டைம் ஃபேமிலி போட்டோவை வெளியிட்ட வெங்கட் பிரபு!.. க்யூட் போட்டோஸ்!…

latest news

ஃபர்ஸ்ட் டைம் ஃபேமிலி போட்டோவை வெளியிட்ட வெங்கட் பிரபு!.. க்யூட் போட்டோஸ்!…

Venkat prabu: சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் இளையராஜாவின் சகோதரர் மற்றும் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரனின் மகன் இவர். சில படங்களில் நடித்துள்ளார்.

ஒருகட்டத்தில் இயக்குனராகும் ஆசை வரவே நண்பர்களை வைத்துக்கொண்டு அவர் இயக்கிய முதல் படம்தான் சென்னை 28. சென்னையில் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்?. அவர்களின் காதல் வாழ்க்கை.. கிரிக்கெட் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் என ஜாலியாக படத்தை எடுத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட பல திரைப்படங்களையும் இயக்கினார். அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா படம் சூப்பர் ஹிட் அடித்து அஜித்துக்கு மேலும் ரசிகர்களை உருவாக்கியது.

ஆனால், அவரோடு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை அவர் சொல்லியும் கேட்காமல் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததால் கோபப்பட்ட அஜித் அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவில்லை. ஆனால், விஜயை வைத்து பட இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு கிடைத்தது.

அப்படி உருவான கோட் திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. எனவே, அடுத்து வெங்கட்பிரபு யாரை இயக்குவார் என தெரியவில்லை. ஒருபக்கம், வெங்கட்பிரபு இதுவரை தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டதே இல்லை.

இந்நிலையில், மனைவி மற்றும் இரு மகள்களுடன் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் வெங்கட்பிரபு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top