Connect with us

ரஜினியின் அடுத்த படத்துக்கு மணிரத்னமா நோ நோ… சான்ஸைத் தட்டித் தூக்கியது அவரா?

latest news

ரஜினியின் அடுத்த படத்துக்கு மணிரத்னமா நோ நோ… சான்ஸைத் தட்டித் தூக்கியது அவரா?

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக் லைஃப் படம் படுதோல்வி அடைந்தது. இதை யாருமே இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. நாயகன் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து இரு பெரும் ஜாம்பவான்களும் தக் லைஃப் படத்தில் தான் இணைந்தார்கள். அதனால் படத்திற்கு ரொம்பவே ஹைப் இருந்தது. ஆனால் அது பெரிய ஏமாற்றமாகி விட்டது. ரசிகர்களை ட்ரோல் பண்ண வைத்து விட்டது.

தக் லைஃப் படத்தின் ரிலீஸ்சுக்கு முன்னாடி மணிரத்னத்தின் அடுத்த படம் ரஜினியோடு தான் என்றார்கள். ஆனா படம் படுதோல்வி. இப்படி இருக்க இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். யார் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் என்ற அந்தத் தகவல் தான் அது. என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

தக் லைஃப் படம் வெற்றியாக இருந்தாலும் கூட மணிரத்னத்தோடு இணையும் வாய்ப்பு மிகக் குறைவு தான். இப்போது ரஜினி கதை கேட்டுக்கிட்டுத்தான் இருக்காராம். கூலி படத்துக்குப் பிறகுதான் ரஜினி அடுத்த டைரக்டரை முடிவு பண்ணுவார் என தெரிகிறது. மாரி செல்வராஜ் சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி இல்லையாம். ஹெச்.வினோத் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்து இருக்கிறதாம்.

அதனால் ரஜினியின் அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்குவதற்குத்தான் வாய்ப்புகள் இருக்கு. மற்றபடி மணிரத்னம் கூட வாய்ப்பு இல்லை. இப்போது தக் லைஃப்புக்கு இப்படி ஒரு ரிசல்ட் வந்ததால் ரஜினிகாந்த் உடனடியாக முடிவு எடுத்து இருப்பார்.

அதனால மணிரத்னம் கூட படம் பண்ண வாய்ப்பு இல்லை. அவரைப் பொருத்த வரைக்கும் அவர் எப்பவுமே ஒரு கணக்கு வைத்திருப்பார். அந்தக் கணக்குக்கு இது ஒத்து வராத விஷயம் என்கிறார் பிஸ்மி.

கடைசியா தக் லைஃப் பார்த்த பார்வை, மணிரத்னத்தையும், ரஜினியையும் இணைய விடாம ஆக்கிடுச்சே. தளபதி படத்துல எவ்ளோ சூப்பரா பண்ணிருந்தாரு மணிரத்னம். இப்போ மீண்டும் அப்படி ஒரு மாஸான ரஜினியைப் பார்க்க முடியாமப் போயிடுச்சே. ஒரு வேளை ரஜினி இந்த விஷயத்துல தப்பிச்சிட்டாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top