Connect with us

இவர ஃபாலோ பண்ணுங்க.. சினிமாவில் ஜெயிச்சுடலாம்! யோகிபாபு சொன்ன அந்த நடிகர்

latest news

இவர ஃபாலோ பண்ணுங்க.. சினிமாவில் ஜெயிச்சுடலாம்! யோகிபாபு சொன்ன அந்த நடிகர்

என்னதான் திறமைகள் என பல இருந்தாலும் உருவ கேலி என வரும் பொழுது அந்த திறமைகள் எல்லாம் முடங்கி எழுந்திருக்கவே முடியாத வகையில் நம்மை செய்து விடும். ஆனால் இப்படி உருவ கேலிகளுக்கு மத்தியில் இப்போது ஒரு பிஸியான நடிகராக மாறி இருப்பவர் நடிகர் யோகி பாபு. சினிமாவில் இருக்கிறேன் என்று சொன்னாலே அவர்களைப் பற்றிய ஒரு இமேஜினேஷன் என்பது மற்றவர்களுக்கு வேறு மாதிரியாக இருக்கும் .

அதாவது சினிமாவில் இருக்கிறவர்கள் அழகாக இருப்பார்கள் கலராக இருப்பார்கள் ஆங்கிலம் சரளமாக பேசுவார்கள் என ஒரு கணக்கு போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் யோகி பாபுவை பொருத்தவரைக்கும் இதில் எந்த தகுதியும் அவருக்கு கிடையாது. இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி இன்று முன்னணி ஹீரோக்களுக்கு இணையான பேரையும் புகழையும் பெற்று முன்னணி காமெடி நடிகராக உயர்ந்து நிற்கிறார் யோகி பாபு.

மோஸ்ட் வான்டெட் காமெடியன் இவர்தான். இவருடைய தனித்துவமே இவருடைய தலைமுடி தான். அதை வைத்து தான் இன்று சினிமாவில் கோலோச்சி வருகிறார் யோகி பாபு. அதை ஃபாலோ செய்து நிறையபேர் அதே தலைமுடியை வைத்து சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் .அடிப்படையில் கால்பந்து வீரரான யோகி பாபு ஆரம்பத்தில் வில்லன் நடிகராக சினிமாவிற்குள் நுழைந்து அதன் பிறகு காமெடியில் கால் பதித்து ஹீரோவாகவும் நடித்து இன்று அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார்.

நயன்தாராவுக்கே ஜோடியாக நடித்தார் யோகி பாபு. இந்த நிலையில் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் இந்த நடிகரை பின்பற்றினால் போதும் என யோகி பாபு ஒரு நடிகரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. டி ராஜேந்திரன். நடிப்பிலிருந்து சினிமாவில் இருக்கும் அத்தனையும் தெரிந்த மனிதர். அவருக்கு தெரியாத விஷயங்கள் என்று எதுவுமே கிடையாது.

tr

tr

இது எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். சினிமாவில் ஜெயித்து விடலாம் என யோகி பாபு கூறியிருக்கிறார். மிக நல்ல மனிதர். எனக்கு ஒரு கதை சொல்லி இருக்கிறார். அதை கூடிய சீக்கிரம் பண்ணலாம் என கூறி இருக்கிறார். ஆனால் இடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். அதனால் கூடிய சீக்கிரம் அவருடைய கதையில் நடிப்பதற்கு காத்திருக்கிறேன் என யோகி பாபு கூறியிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top