Connect with us

Cinema News

சிரிக்க வைத்த குக் வித் கோமாளியா இது? இப்போ வெறுப்பேற்றும் கோமாளிகள்… ஓவர் சீன் போட்டு அன்ஷிதா… முடியல…

Cook with comali: தமிழ் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி தற்போது ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பேற்ற தொடங்கி இருக்கும் நிலையில், இது பழைய சீசனை போல கொஞ்சம் கூட இல்லை எனவும் ரசிகர்கள் இணையத்தில் கடுப்பாகி இருக்கின்றனர்.

சமையல் நிகழ்ச்சியால் ரசிகர்களுக்கு எண்டெர்டெயிண்மெண்ட் கொடுக்க முடியும் என நிரூபித்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கிட்டத்தட்ட மனதுக்கு ரிலாக்ஸ் கொடுத்து பலரின் பேவரிட் நிகழ்ச்சியாக அமைந்தது. இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நடுவராக இருந்தனர்.

இதையும் படிங்க: வரிசையாக இரண்டாம் பாகங்கள்… கார்த்தி கைவசம் இத்தனை படங்களா?

குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனில் இருந்து செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறினார். தயாரிப்பு குழுவான மீடியா மேசனும் விலகியதை அடுத்து பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் இந்நிகழ்ச்சியை இயக்கி கொண்டு இருக்கிறது. புது கோமாளிகளாக சீரியல் நடிகை அன்ஷிதா, ஷப்னம், கெமி என சிலர் உள்ளே வந்து இருக்கின்றனர்.

நான்கு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் கோமாளிகள், குக் செய்பவரிடம் வெறுப்பை காட்டுவதை பார்க்க முடிகிறது. அதிலும் கோமாளி அன்ஷிதா நேரடியாக வெறுப்பை குக்குகளிடம் காட்டுவது எந்தவிதத்திலும் ரசிக்கும்படியாக இல்லை. முன்பெல்லாம் குக்குகளை பார்த்து கோமாளிகள் செய்த கலாட்டா ரசிக்க வைத்தது.

இதையும் படிங்க: தனுஷோட அப்படி இருந்திருப்பாங்க! கடைசில தனக்கே ஆப்பு வைத்துக் கொண்ட சுசி

அதுவே குக் வித் கோமாளியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. ஆனால் தற்போது இப்படி வெறுப்பை காட்டி ரசிகர்களுக்கு கடுப்பை தான் அதிகம் கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரே மலையாளத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அன்ஷிதா கலந்துக்கொண்டு அங்கும் சண்டை தான் போட்டு இருக்கிறார். அன்ஷிதா மட்டுமல்லாமல் இந்த சீசனில் எல்லா பெண் கோமாளிகளுமே சிரிப்புக்கு பதில் கடுப்பை கிளப்பி வருவதாக பேச்சுகள் இருக்கிறது.

இதில் கொஞ்சம் ஆறுதலாக பழைய கோமாளிகளான புகழ் மற்றும் குரோஷி இருவரும் நிகழ்ச்சியை காப்பாற்ற போராடி வருகின்றனர். ஓரளவு நல்ல காமெடிகள் கொடுத்தும் வருகின்றனர். இன்னமும் பழைய சில ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்கள் எல்லாமே டாப் குக்கு டூப் குக்கை பார்க்க தாவி விட்டனர் என்றே கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ் தயாரிப்பு குழுவினர் இயக்கும் செல்லம்மா சீரியல் ஹீரோயின் என்பதால் அன்ஷிதாவுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பழைய கோமாளிகளின் காட்சிகள் குறைக்கப்படுகிறது. இப்படியே போனால் குக் வித் கோமாளி இந்த சீசன் டாக்ஸிக் ஷோவாகி அதன் பெயரை இழந்துவிடும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார்கள்… கடைசியில் மாஸ் வில்லன்… அசால்ட்டாக மாநாடு படத்தினை தட்டி தூக்கிய எஸ்.ஜே.சூர்யா…

google news
Continue Reading

More in Cinema News

To Top