நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். 30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்தவர். இவருக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக நிறைய பெண்கள் இவரின் ரசிகைகளாக இருக்கிறார்கள்.. விஜயை சொந்த அண்ணனாகவும் அவர்கள் பார்க்கிறார்கள்..
எனவே வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை வழங்கியிருக்கிறது. இந்த விசில் சின்னம் தவெகவுக்கு பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் காமெடி நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘காலையில 6 மணிக்கு என் வீட்டில குக்கர் விசில் அடிக்கும்.. 8 மணிக்கு குப்பைவண்டி வந்து விசில் அடிக்கும்.. 10 மணிக்கு நான் பஸ்ல போகும்போது கண்டக்டர் விசில் அடிப்பாரு.. 12 மணிக்கு நான் படம் பார்க்க தியேட்டருக்கு போனா ரசிகர்கள் விசில் அடிப்பாங்க.. 3 மணிக்கு என் பையனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரும்போது பிடி சார் விசில் அடிப்பார்..
நைட்டு 11 மணிக்கு மேல பீச்சில் தப்பு தண்டா பண்ணா போலீஸ்காரங்க விசில் அடிப்பாங்க.. இந்த விசில் எல்லாத்துக்கும் பயன்படும்.. இப்படி சொல்றதுனால நான் விஜய் சாரை மறைமுகமாக வேற ஏதோ சொல்றேன்னு நினைக்காதீங்க.. இதை வச்சி நான் தவெக கட்சி என்று நினைக்காதீங்க’ என பேசியிருக்கிறார்.
