குக் வித் கோமாளி சீசன் 7ல் வாட்டர்மெலன் திவாகர் பிரச்சனை ஏற்பட்ட எபிசோட் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அந்த கேரக்டரில் எதிர்பாராத ஒரு பிரபலத்தை விஜய் டிவி களமிறக்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமையல் நிகழ்ச்சியில் புது ட்விஸ்ட்டுகளுடன் 6 சீசன் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியின் இந்த சீசனில் கணவன் மனைவி ஜோடியாக களமிறங்கி இருக்கும் நிலையில், ஆரம்பம் முதலே கலகலப்பாக எபிசோட்கள் சென்று கொண்டு இருக்கிறது.
ஆனால் அதற்கு திஷ்டி வைக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டில் கோமாளியாக வந்த திவாகர் தன்னை அடித்ததாக புகழ், கானா வினோத் மற்றும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மீது புகார் கொடுத்து இருந்தார்.
அந்த பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது. மாகாபா குடிக்காரன், புகழுக்கு என் மீது பொறாமை என பல குற்றச்சாட்டுக்களை திவாகர் வைக்க இணையமே பரபரப்பானது. அதற்கு எதிராக காவல் நிலையத்தில் இருந்து மாகாபா ஆனந்த் காட்டமாக பேசி வீடியோ இந்த விஷயத்தில் கவனம் ஈர்த்தது.
நிஷாவிடம் தகாத வகையில் வாட்டர்மெலன் பேசியதே பிரச்சனைக்கு மூல காரணமாக அமைந்ததாக உண்மை வந்தது. இந்நிலையில் திவாகர் பிரச்சனை நடந்த அந்த எபிசோட்டை விஜய் டிவி ஒளிபரப்புமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை கத்தரித்து இருக்கின்றனர்.

வாட்டர்மெலன் திவாகர் வந்த அந்த காட்சிகளை நீக்கிவிட்டு அவர் கெட்டப்பில் நிஷாவின் கோமாளியாக அவசரத்திற்கு டிஜே பிளாக்கை களமிறக்கி இருக்கின்றனர். அவசரத்திற்கு எந்த பிரபலமும் கிடைக்காமல் இப்படி பிளாக்கை மாட்டி விட்டீங்களே என பலரும் கலாய்த்து வருகின்றனர்.







