dhanush

நடிகர் தனுஷ் இப்போது போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அவரின் 55வது திரைப்படம். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து, அதாவது தனுஷின் 56வது படத்தை அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இப்பட வேளைகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது..

இந்த படத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வேகமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒருபக்கம் இந்த படத்தை முடித்துவிட்டு தனுஷ் யாரின் இயக்கத்தில் நடிப்பார் என்கிற்ர என்று எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் உருவாகியிருக்கிறது. தனுசுக்காக கடந்து சில வருடங்களாகவே ஹெச்.வினோத் காத்திருக்கிறார். எனவே ராஜ்குமார் பெரியசாமி படத்தை முடித்துவிட்டு அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர்..

ஆனால் அது இல்லை என்கிறார்கள்.. ராஜ்குமார் பெரியசாமி படத்தை முடித்துவிட்டு தனுஷ் லவ்வர் வந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கவுள்ள சரித்திர படத்தில் நடிக்கவிருக்கிறாராம். மாரி செல்வராஜ் படத்துக்கு பின்னரே தனுஷ் ஹெச்.வினோத்துடன் இணைவார் என தெரிகிறது.

எனவே, அவ்வளவு காலம் தனுஷுக்காக காத்திருக்க முடியாது என்பதால் ஹெச்.வினோத் வேறு ஒரு நடிகரை வைத்து படம் இயக்குவார் எனத்தெரிகிறது.