செம கிளுகிளுப்பு.. மறுபடியும் பாக்கணும்!.. எஜமான் பட இயக்குனர் இப்படி மாறிட்டாரே!....

uthaya
Director RV Udhayakumar: தமிழ் சினிமாவில் முத்தான பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். ரஜினி, விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து 90களில் தமிழ் பல படங்களை இயக்கியிருக்கிறார். கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்காரவேலன், எஜமான், பொன்னுமணி போன்ற பல ஹிட் படங்களை இந்த தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.
சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்த ஆர்வி உதயகுமார் மேடையில் ஏறி பேசிய அவரின் சில பேச்சுக்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ‘சிக்லெட்ஸ்’ என்ற ஏ சர்டிஃபிக்கேட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாதான் அது. முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுத்திருக்கும் அந்தப் படத்தை முத்து என்பவர் இயக்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: செம யூத்தா மாறிட்டாரே ஏ.கே.!. தல நீ வேறலெவல்!.. ஷாலினி பகிர்ந்த வைரல் புகைப்படம்…
படத்தின் டிரெய்லர் வெளியாகி இளசுகளை தூங்க விடாமல் கெடுத்திருக்கிறது. அந்தளவுக்கு ஆபாசமான காட்சிகள், முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகள் நிறைந்த படமாக இந்த சிக்லெட்ஸ் திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிறகே ஆர்வி உதயகுமார் சில விஷயங்களை கூறினார்.
அதாவது ‘ நாம அன்றைக்கு தெரியாத செய்த தவறை இன்றைக்கு தெரிந்தே செய்கிறார்கள் இந்த 2கே கிட்ஸ். நாம பண்ணாத லொள்ளா? எல்லா பெற்றோர்களும் இப்படித்தான். வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போதுதான் ஒருவன் யோக்கியமானவனா இருந்திருப்பான். ’

chic
இதையும் படிங்க: ஆஃப் சேரின்னாலும் அத மூட மாட்டேன்!.. பாவாடை தாவணியில் கிளுகிளுப்பு காட்டும் பூஜா ஹெக்டே
‘ வாய்ப்பு கிடைச்சா எல்லாரும் விளையாடுவாங்க. எனக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்கல. அதனால இந்த டிரெய்லரை நான் ரொம்ப ரசிக்கிறேன். இன்னொரு முறையும் பார்க்கனும் போல இருக்கிறது.’ என்று கூறியதோடு இந்தப் படத்தின் இயக்குனரை மேடைக்கு அழைத்து ‘எங்கள மாறி கிட்ஸ்களுக்கும் இந்த மாதிரி படத்தை எடுங்க’ என கூறியிருக்கிறார். இது அங்கு இருந்தவர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதுமட்டுமில்லாமல் படத்தின் இயக்குனர் அப்படியே இந்தப் படத்தில் எல்லாவற்றையும் காட்டியிருப்பதால் மிகவும் நேர்மையானவர் என்பது தெரிகிறது. அவர் ஒன்றும் தவறான படத்தை எடுத்து விடவில்லை என்றும் ஆர்வி உதயகுமார் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: போண்டாமணி கடனை கேப்டன் அடைச்சாரா? அதெல்லாம் இல்லைங்க.. நடிகர் சொன்ன திடுக்கிடும் தகவல்