draupathi

பழைய வண்ணாரப்பேட்டை என்கிற படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின் திரௌபதி, ருத்ர தாண்டவம், மகாசூரன் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். பாமக விசுவாசியான மோகன்.ஜி ஒரு குறிப்பிட்ட சாதியை மோசமாக விமர்சித்து தனது திரைப்படங்களில் காட்சிகளை வைப்பார். அதனாலேயே கடும் ட்ரோல்களையும், விமர்சனங்களையும் அவர் சந்தித்து வருகிறார். ஆனாலும் சலிக்காமல் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லி வருகிறார் மோகன் ஜி.

தற்போது திரௌபதி 2 படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சின்மயி ஒரு பாடலை பாடியிருந்தார். ஆனால் இந்த படத்தின் கொள்கை பற்றி எனக்கு தெரிந்திருந்தால் இந்த படத்தில் பாடி இருக்க மாட்டேன் என அவர் சொல்ல சின்மயி மன்னிப்பு கேட்கவேண்டும் என மோகன்.ஜி கோபப்பட்டார். அதன்பின் தற்போது வேறு பாடகியை வைத்து அந்த பாடலை பாட வைத்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் கடந்து சில நாட்களாகவே திரௌபதி 2 படம் பற்றி ஊடகங்களில் பேசி வந்தார் மோகன்.ஜி. குறிப்பாக ‘நான் ஏதாவது கோயிலுக்கு போனால் என் கையை பிடித்துக் கொண்டு விஐபி தரிசனத்திற்கு கூட்டி போவார்கள்.. ஆனால் பா.ரஞ்சித்தை அப்படி கூட்டு போவார்களா எனக்கு தெரியாது’ என்றெல்லாம் பேசியிருந்தார்.

mohang

இந்நிலையில், திரௌபதி 2 படத்திற்கு கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழருக்கு எதிராக முகலாய மன்னர்கள் செய்த கொடுமைகளை திரௌபதி 2 படம் பேசியிருப்பதால் இந்த நடவடிக்கை என சொல்லப்படுகிறது.

திரௌபதி 2 படத்தில் ஏற்கனவே மோகன்.ஜி இயக்கத்தில் தொடர்ந்து நடித்த ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 23ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.