இப்படியெல்லாம் காட்டினா நாங்க காலி!.. இளசுகளை ஏங்க வைக்கும் கயாடு லோஹர்!…

Published on: August 8, 2025
---Advertisement---

Kayadu lohar: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயாடு லோஹர். அதன்பின் இவரின் குடும்பம் புனேவில் வசித்தது. கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதில் சில நகைக்கடை விளம்பரங்களும் அடக்கம். அதன்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வமும் இவருக்கு ஏற்பட்டது.

இவர் முதன் முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். இந்த படம் 2021ம் வருடம் வெளியானது. ஒருபக்கம் அழகிப்போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு வந்தார். அப்போது ஒரு மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார்.

ஆனால், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான டிராகன் படம் கயாடு லோஹருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே கயாடு லோஹரின் புகைப்படங்கள் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அதில் சந்தோஷப்பட்ட கயாடு லோஹர் வீடியோ போட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்னார். டிராகன் படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடிக்க கயாடு லோஹருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிய துவங்கியது. அதர்வாவின் இதயம் முரளி படத்தில் நடித்திருக்கிறார். சிம்புவை வைத்து குட் நைட் பட இயக்குனர் இயக்கவுள்ள படத்திலும் கயாடு நடிக்கவுள்ளார்.

இதுபோக பல படங்களின் வாய்ப்பையும் கையில் வைத்திருக்கிறார். இளசுகளின் கனவு கன்னியாகிவிட்ட கயாடு லோஹர் அவ்வப்போது கவர்ச்சியான உடையில் அழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார். அந்த வகையில் கயாடுவின் புதிய படங்கள் இளசுகளை ஏங்க வைத்திருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment