பேண்ட் போட மாட்டியா செல்லம்!... சன் ஷைனில் மனசை அள்ளும் பிரியா பவானி சங்கர்..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:45  )

Priya bhavani shankar: செய்தியாளராக இருந்த போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரியா பவானி சங்கர். அப்போதே அவரை சினிமாவில் நடிக்கும்படி ரசிகர்கள் சொன்னார்கள். ஆனால், பிரியா அதில் ஆர்வம் காட்டவில்லை. சினிமாவிலிருந்து வாய்ப்புகள் வந்தும் அவர் நடிக்கவில்லை.

ஆனால், விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது அதில் நடிக்க சம்மதித்தார். அதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். என் உடலை முன்னிறுத்தி எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டே நடிக்க துவங்கினார்.

இப்போது வரை அதை கடைப்பிடித்து வருகிறார். மேயாத மான் படத்திற்கு பின் பல படங்களிலும் நடித்திருக்கிறார். கவர்ச்சி காட்டாமால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சில படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் கடந்த சில வருடங்களாக அவருக்கு ஹிட் படங்கள் அமையவில்லை.

எனவே, பிரியா நடித்தாலே படம் தோல்வி என செண்டிமெண்ட்டாக திரையுலகில் பேச துவங்கினார்கள், இது தன்னை காயப்படுத்துவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஒருபக்கம், அவரின் நடிப்பில் வெளியான டிமாண்டி காலணி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது.

priya bhavani

ஒருபக்கம், பல நாடுகளுக்கும் சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story