---Advertisement---

எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக கமிட் ஆகியுள்ள பிரபல நடிகை!… செம எண்ட்ரியா இருக்கே!

Published on: March 19, 2026
---Advertisement---

தமிழ் சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என அடிக்கடி ஆர்டிஸ்ட் மாற்றம் என்பது சாதாரணமாக நடக்கும் விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த முறை சீரியலில் நடந்து இருக்கும் ஒரு மாற்றம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய ஆர்வத்தை கிளப்பி இருக்கிறது.

சன் டிவியில் தற்போது எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஒளிபாப்பாகி வருகிறது. முதல் பாகத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதிலும் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்துவின் நடிப்பிற்கே பலரும் வாவ் சொல்ல தொடங்கினர். 

மாரிமுத்து நடிப்பில் அந்த கேரக்டரே ஹிட் அடிக்க தொடங்கியது. ஆனால் எதிர்பாராத விதமாக மாரிமுத்து திடீரென ஒருநாள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அதை தொடர்ந்து சீரியல் பெரிய அளவில் ஆட்டம் கண்டது. இதனால் முதல் சீசன் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

இரண்டாவது சீசன் தொடங்கி ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த சீரியலில் மூன்று மருமகள் கேரக்டர் தான் முதலில் பெரிய முக்கியத்துவம் இருந்தது. அதிலும் ஈஸ்வரி என்ற முதல் மருமகளாக நடித்தார் கனிகா. 

ஆனால் அவர் சீரியலில் இருந்து வெளியேறி இன்னொரு ரியாலிட்டி ஷோவிற்கு நடுவராக சென்று விட்டார். இருந்தும் தொடர்ந்து ஈஸ்வரி மருத்துவமனையில் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டு வந்தது. 8 மாதம் கடந்த நிலையில் ஈஸ்வரி கேரக்டருக்கு நடிகை ஸ்ரீஜா கமிட் ஆகி இருக்கிறாராம்.

இவர் சன் டிவியின் பிரபல பொம்மலாட்டம் சீரியலின் ஹீரோயினாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பில் மாஸ் காட்டும் இவர் பல வருடம் கழித்து மீண்டும் முக்கிய கேரக்டரில் ரீ எண்ட்ரி கொடுத்து இருப்பது ஆர்வத்தை காட்டி உள்ளது. இன்னும் சில தினங்களில் இவர் நடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகும் எனக் கூறப்படுகிறது.