Connect with us

சூரியின் பெயருக்கு பின்னால் இருக்கும் ரஜினி படம்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே!..

latest news

சூரியின் பெயருக்கு பின்னால் இருக்கும் ரஜினி படம்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே!..

சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு சுண்ணாம்பு அடிப்பது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து வாய்ப்பு தேடி சினிமா ஷூட்டிங்கிலும் கிடைக்கும் வேலைகளை செய்து ஒருகட்டத்தில் கும்பலில் ஒருவராக நிற்கும் வாய்ப்பை பெற்று நடிக்க துவங்கியவர்தான் சூரி.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடி ரசிகர்களிடம் அதிக அளவில் ரீச் ஆனது. அதன்பின் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார். பல படங்களிலும் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா,விஷால் உள்ளிட்ட பலரின் படங்களிலும் நடித்தார்.

இதில், சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் சூரிக்கு மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்தது. ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படம் மூலம் சூரியை கதையின் நாயகனாக மாற்றினார். விடுதலை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தார் சூரி.

இந்த படத்தின் வெற்றி இனிமேல் ஹீரோவாக நடிக்கலாம் என்கிற நம்பிக்கையை சூரிக்கு கொடுத்தது. அதன்பின் சூரி நடித்து வெளியான கருடன் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது மாமன் படம் வெளியாகியிருக்கிறது. குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளை கொண்ட இப்படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. சினிமா மட்டுமில்லாமல் மதுரையில் சூரிக்கு ஹோட்டல் தொழிலும் இருக்கிறது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சூரி ‘என் உண்மையான பெயர் ராமன். நான் தீவிர ரஜின் ரசிகன். தளபதி படத்தில் ரஜினி சாரின் பெயர் சூர்யான்னு இருக்கும். மம்முட்சி சார் ரஜினியை சூர்யான்னு கூப்பிடுறதே அழகா இருக்கும். அதைப்பார்த்து நானும் என்னோட பெயரை சூர்யான்னு மாத்திக்கிட்டேன். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போனதும் என் அம்மாக்கிட்ட ‘இனிமேல் என்னை சூர்யான்னுதான் கூப்பிடம்னு சொன்னேன். என் அம்மா அது யாருன்னு கேட்டாங்க. சூர்யான்னு சொல்ல சொன்னது ஒரு கட்டத்தில் சூரின்னு மாறிடுச்சி. இதுவே நல்லாதான் இருக்குன்னு வச்சிக்கிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

சூரி இரட்டை குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர். எனவே, இவருக்கு ராமன் எனவும், மற்றொருவருக்கு லட்சுமணன் எனவும் பெயர் வைத்தனர். ஆனால், அவரோ தளபதி படம் பார்த்து சூர்யா என பெயரை மாற்றி இப்போது சூரி ஆகிவிட்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top