Connect with us

தீனா படத்துக்கு இப்படி ஒரு பின்னணியா? முருகதாஸ் எப்படி என்டர் ஆனாரு?

latest news

தீனா படத்துக்கு இப்படி ஒரு பின்னணியா? முருகதாஸ் எப்படி என்டர் ஆனாரு?

அஜித் அதிரடி நாயகனாக நடித்த முதல் ஆக்ஷன் படம் என்றால் அது தீனா தான். இந்தப் படத்தில் இருந்து தான் அஜித்தைத் தலன்னு சொன்னாங்க. படத்தில் அடியாளாக வரும் மகாநதி சங்கர் தான் அஜித்தை அப்படிக் கூப்பிடுவார். பின்னாளில் அதுவே தல அஜித் என அழைக்கக் காரணமானது.

2001ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் தீனா. அஜித்குமார், சுரேஷ் கோபி, லைலா, திவ்யா, ஸ்ரீமன், மகாநதி சங்கர், ராஜேஷ், நக்மா என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். வத்திக்குச்சி பத்திகாதுடா என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நக்மா ஆட்டம் போட்டு அசத்தினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அஜித்தின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்தப் படம் உருவானது எப்படின்னு பிரபல தயாரிப்பாளர் ராம் வாசு ஒரு தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

நிக் ஆர்ட்ஸ் தயாரிச்சதுல மிகவும் சக்சஸ் ஃபுல்லா அமைஞ்ச படம் வாலி. எனக்குத் தெரிஞ்சி எஸ்.ஜே.சூர்யா சாரும், ஏ.ஆர்.முருகதாஸ் சாரும் அவங்க ஆபீஸ்லயே தான் கிடப்பாங்க. முருகதாஸ் நிக் ஆர்ட்ஸ்சுக்குப் படம் பண்ணலையே ஒழிய அங்கு தான் வளர்ந்தவரு.

அவரு கைகாட்டி சக்கரவர்த்தி கைகாமிச்ச படம்தான் தீனா. அப்போ சக்கரவர்த்தி சார் தான் அஜித் சாருக்குக் கதை கேட்பாரு. ஓகே தலைவரே. இதைப் பண்ணலாம். இதை வேணாம்னு சொல்வாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் அதிரடி படத்திற்குக் கதை கேட்டவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி என்பதும் அவருடைய தேர்வு எல்லாமே அருமையாக இருப்பதும் அஜித் ரசிகர்களுக்குக் கிடைத்த கிஃப்ட் என்றே சொல்லலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top