Homelatest newsEnnai arinthal: நல்லவேளை கௌதம் ஒத்துக்கல! ‘என்னை அறிந்தால்’ ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி இவ்ளோ நடந்திருக்கா?

Ennai arinthal: நல்லவேளை கௌதம் ஒத்துக்கல! ‘என்னை அறிந்தால்’ ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி இவ்ளோ நடந்திருக்கா?

ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால் ரசிகர்கள் மீண்டும் அதே கூட்டணியில் மற்றும் ஒரு படத்தை எதிர்பார்ப்பது வழக்கம்தான். அப்படி அஜித்துக்கு ஒரு பெரிய மாஸ் படமாக அமைந்தது என்னை அறிந்தால் திரைப்படம். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த படமாகவும் அமைந்தது.

குறிப்பாக இந்த படத்தில் அருண் விஜய் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த இருந்தது தான் அனைவருக்குமான ஒரு சர்பிரைஸ். அதுவரை அருண் விஜய்க்கு படங்களே இல்லாத நிலையில் இந்தப் படம் அவருக்கு ஒரு கம்பேக்காக அமைந்திருந்தது. இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெரிய அளவு வெற்றி பெற்றதோடு அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.

இப்போது வரை அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதனால் அருண் விஜய் எங்கு போனாலும் மறுபடியும் அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்ற ஒரே கேள்வியை தான் கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் கௌதம் மேனன் சமீபத்திய ஒரு பேட்டியில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் உள்ள அவருடைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த படத்தை தயாரித்தது ஏ எம் ரத்னம். முதலில் என்னை அறிந்தால் படத்தின் ஸ்கிரிப்டுக்கு முன்பு ஒரு ரீமேக் படத்தை பண்ணுவதற்காக தான் அஜித் தரப்பிலிருந்தும் ரத்தினம் தரப்பில் இருந்தும் கௌதம் மேனனை அழைத்திருக்கிறார்கள்.

அந்த ஸ்கிரிப்ட்டில் கௌதம் மேனனுக்கு உடன்பாடு இல்லையாம். அதனால் ஒரு இரண்டு மாதம் நேரம் கொடுங்கள். அதற்குள் நான் ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து விடுகிறேன். அது பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சொன்னதைப் போல இந்த ரீமேக் பண்ணிவிடலாம் என கௌதம் சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதைப் போல இரண்டு மாதங்களுக்குள் ஒரு சூப்பரான ஸ்கிரிப்டை தயார் செய்து அஜித்திடமும் ரத்தினத்திடமும் காண்பித்திருக்கிறார்.

அது அஜித்துக்கு மிகவும் பிடித்த போக அதன் பிறகு தான் இந்த படம் வளர தொடங்கி இருக்கிறது. அதுதான் இப்போது நாம் பார்க்கும் என்னை அறிந்தால் திரைப்படம். அது மட்டுமல்ல வில்லன் கேரக்டருக்கு கௌதம் மேனனை பொறுத்த வரைக்கும் அருண் விஜயைத்தான் ஆரம்பத்திலிருந்து மனதில் நினைத்தாராம்.

அவரை வைத்து டெஸ்ட் சூட் எல்லாம் எடுத்து அஜித்திடம் போட்டுக் காட்டி இருக்கிறார். அது அஜித்துக்கு மிகவும் பிடிக்க தயாரிப்பாளரை அஜித்தான் கன்வின்ஸ் செய்து அருண் விஜயை நடிக்க வைத்ததாக கௌதம் மேனன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments