ஃபேன்டஸி த்ரில்லர் படமான Immortal ட்ரெய்லர் வெளியானது!

X
ஃபேன்டஸி த்ரில்லர் படமான Immortal ட்ரெய்லர் வெளியானது!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகியிருக்கு. ஒன்று சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம்.

இன்னொரு படம் ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’. அடுத்து தான் ஹீரோவாக நடித்து ரெடியாக இருக்கும் ‘Immortal’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி.

இப்படம் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார் இல்லை, சாம்.சி.எஸ் தான் இசை. இதில் ஜிவிக்கு ஜோடி கயாடு லோஹர் தான்.

இந்த படத்தை இயக்கியிருப்பது மாரியப்பன் சின்னா. இது இவருக்கு முதல் படமாம். தற்போது, இதன் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.