எத்தனை கோடி கொடுத்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்! – ஜி.வி.பிரகாஷ் எடுத்த அந்த முடிவு

X
எத்தனை கோடி கொடுத்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்! – ஜி.வி.பிரகாஷ் எடுத்த அந்த முடிவு

தென்னிந்திய திரையுலகில் இளம் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜி.வி. பிரகாஷ். வெயில் படத்தில் அறிமுகம் ஆகி கிட்டத்தட்ட 100 படங்களுக்கு இசயமைத்துள்ளார். இளம் வயதிலேயே ரஜினி, விஜய், அஜித்,சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இசை மட்டுமின்றி நடிப்பிலும் பிஸியாக உள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த ஹேப்பி ராஜ் நலல் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமார், தனது திரைப்பயணம் மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

பணம் மட்டும் வாழ்க்கையில் முக்கியமில்லை. நம் மீது மக்களும் ரசிகர்களும் மிகப்பெரிய நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளார்கள். அந்த மரியாதையைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. எனவே, மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலான எந்த விளம்பரங்களிலும், அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் நிச்சயமாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள், பான் மசாலா, புகையிலை பொருட்கள், மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் குளிர்பானங்கள் போன்றவற்றின் விளம்பரங்களில் நடித்து வருகின்ற நிலையில்ஜி.வி.பிரகாஷின் இந்த முடிவு அனைவராலும் பாரட்டப்படுகிறது.