3 நாட்களில் ஜெயிலர் வசூலை முறியடித்த டாக்ஸிக்!

X
3 நாட்களில் ஜெயிலர் வசூலை முறியடித்த டாக்ஸிக்!

நடிகர் யாஷ் கன்னடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் தான் அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது.

இவரது லேட்டஸ்ட் படமான ‘டாக்ஸிக்’ கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளி வந்தது. நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு ஓவர் ஹைப் கொடுத்து வந்தார்கள்.

ஆனால், படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. விமர்சனங்கள் நெகட்டிவ்வாக இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இப்படம் குறைவைக்கவில்லை. கடந்த 3 நாட்களிலேயே உலக அளவில் ரூ.221.35 கோடி வசூல் செய்துள்ளது.

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்து 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தான் ‘ஜெயிலர்’. இதன் முதல் 3 நாட்கள் வசூல் உலக அளவில் ரூ.220.92 கோடியாம். ‘டாக்ஸிக்’ வசூலை விட ‘ஜெயிலர்’ வெறும் ரூ.43 லட்சம் தான் குறைவு.