ஆமாம்.. மனைவி ஆர்த்தியை பிரிகிறேன்!.. ஒருவழியாக வாய் திறந்த ஜெயம் ரவி...

Jayam Ravi: ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ரவி. இவரின் அப்பா மோகன் தமிழில் பல படங்களுக்கு எடிட்டராக வேலை செய்து பின்னர் தயாரிப்பாளராக மாறியவர். ரவியின் அண்ணன் ராஜா இயக்கத்தில் ரவி ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ஜெயம். இது தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த படம் வெற்றி அடையவே ஜெயம் என்பது ரவிக்கு முன்பு ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து அண்ணனின் இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கி ஹிட் கொடுத்தார். பல நூறு கோடிகளை வசூல் பண்ணவில்லை என்றாலும் ஒரு மினிமம் கேரண்டி உள்ள ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.

jayam ravi

ஜெயம் ரவி 2009ம் வருடம் ஆர்த்தி என்கிற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் இருக்கிறார்கள். ரவி, ஆர்த்தி இருவருமே இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரிவதாக செய்திகள் வெளியானது. ஜெயம் ரவியை வைத்து படங்களை தயாரித்து வந்த ஆர்த்தியின் அம்மாவுக்கும், ரவிக்கும் இடையே ஏதோ பிரச்சனை ஆகி அது விவாகரத்து வரை சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.

ஆனால், ஜெயம் ரவி இதுவரை இதுபற்றி எங்கும் பேசவில்லை. இந்நிலையில்தான், டிவிட்டரில் மனைவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். ‘எல்லோரிடமும் வெளிப்படையாக இருக்க ஆசைப்பட்டே என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி செய்தியை உங்களிடம் பகிர்கிறேன். ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக முடிவெடுத்திருக்கிறேன். இந்த முடிவு என்னை சார்ந்து இருப்பவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமைக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது எனது சொந்த முடிவு. ரசிகர்களை மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே எனது முன்னுரிமை. நான் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாக இருக்கவே ஆசைப்படுகிறேன்’ என அதில் கூறியிருக்கிறார்.

jayam

#image_title

Related Articles
Next Story
Share it