வாய்ப்புதான் இல்ல! ஆனால் அதுல இவர்தான் நம்பர் ஒன்.. வேறு எந்த நடிகர் படத்திலும் இல்லாத ஒரு புதுமை

X

Actor Jeeva: தமிழ் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கின்றன. அதில் ஒரு சில வாரிசு நடிகர்கள் மட்டுமே ஜெயித்து வருகின்றனர். ஒரு சில நடிகர்கள் இன்னும் தனக்கான இடத்தை தேடிக்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெரிய பெரிய முன்னணி நடிகர்களாக இருந்தவர்களின் வாரிசுகள் தன் பெற்றோர்கள் அடைந்த அந்த ஒரு புகழை அடைவதற்கு போராடிக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான சௌத்ரியின் மகனும் நடிகருமான ஜீவாவும் இந்த லிஸ்டில் அடங்கியிருக்கிறார். ஒரு சில நல்ல படங்களை கொடுத்தாலும் ஒரு டாப் நடிகர் என்ற அந்தஸ்தை இவரால் அடைய முடியவில்லை .ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமான ஜீவா தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படிங்க: கேட்டாங்களே நச்சுனு ஒரு கேள்வி! விஜய் மீது பெரிய குற்றச்சாட்டை வச்ச வனிதா.. தளபதி கேட்பாரா?

இவருடைய நடிப்புக்கு தீனி போட்ட படமாக ஒரு சில படங்கள் அமைந்திருந்தன. அதில் ராம் ,கற்றது தமிழ், முகமூடி ,நீ தானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள் இவருடைய நடிப்பை மெருகேற்றிய திரைப்படமாக அமைந்தது. மற்ற படங்களில் காமெடி கதையில் நடித்து அதன் மூலமும் ரசிகர்களை ரசிக்க வைத்தார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் 83 என்ற படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக அந்த படத்தில் நடித்து ஹிந்தியில் தனக்கென ஒரு புகழை அடைந்தார்.

இப்போது சமீப காலமாக ஜீவாவை படங்களில் பார்க்க முடிவதில்லை. அவருடைய அப்பா நிர்வகித்து வந்த தயாரிப்பு நிறுவனத்தை இப்போது ஜீவா தான் பார்த்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் எந்த ஒரு நடிகர் படத்திலும் இல்லாத ஒரு சாதனை ஜீவா படத்தில் இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஹரா படத்துக்கு அதை நம்பி போனா ஏமாந்துருவீங்க… புதுசா கொஞ்சம் யோசிங்கப்பா…!

அவர் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கச்சேரி. அந்த படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் .அந்த படத்தில் அமைந்த எல்லா பாடல்களிலும் முதல் இரண்டு வரிகளும் ஒன்று போல் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அதாவது  ‘கச்சேரி கச்சேரி’, ‘ வாடா வாடா’, ‘ அழகு அழகு’, ‘ கடவுளே கடவுளே’, ‘ வித்தை வித்தை’ இந்த பாடல்களில் முதல் இரண்டு வரிகள் ஒன்று போல் இருப்பதை பார்க்க முடியும். இதே மாதிரி வேறு எந்த படத்திலும் அமைந்த எல்லா பாடல்களும் இப்படி அமையவில்லை. இது ஒரு புதுமையான விஷயம் தான் என சித்ரா லட்சுமணன் கூறி இருக்கிறார்.