காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடிக்கும்படம் தி இந்தியா ஸ்டோரி. இப்படம் பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதனை ஒரு குடும்பத்தின் பார்வையில் மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியபோது, பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. எனவே இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றுள்ளோம் என்றார்
இயக்குநர் சேட்டன் DK கூறியபோது. இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் உலகளாவிய அளவில் வெளியிடுகிறது.
இந்த நிலையில் இப்படம் வருகிற ஜூலை 26ம் தேதி வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.







