theri

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் விஜய். அவர் தற்போது அரசியலுக்கு சென்று விட்டதால் அவரின் ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி திரைப்படமாக பார்க்கப்படுகிறது.. ஆனால் அந்த படம் சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் இதுவரை வெளியாகவில்லை
.,

இந்நிலையில்தான், கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லி இயக்கி விஜய், சமந்தா ஆகியோர் நடித்து 2016ம் வருடம் வெளியான தெறி திரைப்படம் பிப்ரவரி 27ம் தேதியான நேற்று தமிழகமெங்கும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது. பல தியேட்டர்களிலும் படம் வெளியாகியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு விஜயின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி வரை வசூலை அள்ளியதால் தொடர்ந்து விஜயின் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது..

ஒரு மாதத்திற்கு முன்பே தெறி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய கலைப்புலி தாணு திட்டமிட்டார். ஆனால், சின்ன படங்களின் தயாரிப்பாளர்கள் ‘இப்போது தெறி படத்தை வெளியிட்டால் எங்கள் படத்தின் வசூல் பாதிக்கும்.. ரிலீஸ் தேதியை தள்ளி வையுங்கள்’ என கோரிக்கை வைத்ததால் இரண்டு, மூன்று முறை ரீ-ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின் பிப்ரவரி 27ம் தேதியான நேற்று அந்த படத்தை தாணு வெளியிட்டார்.. ஆனால் நேற்று பார்த்து விஜயின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

இதனால் விஜயின் இமேஜ் கொஞ்சம் டேமேஜ் ஆகியிருக்கிறது.. நேற்று மதியம் முதலே விஜய் விவாகரத்து தொடர்பான விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. குறிப்பாக விஜய் நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என சங்கீதா சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக தெறி படத்தின் ரீ-ரிலீஸ் வசூல் கடுமையாக பாதிக்கும் எனத்தெரிகிறது. இதையடுத்து 10 தடவை தள்ளி போட்டு இன்னைக்குதான்டா தெறிய ரீ-ரிலீஸ் பண்ணேன். கடைசிவரை என் 10 கோடி கூட வராது போலையேடா’ என கலைப்புலி புலம்புது போல மீம்ஸ்களை உருவாக்கி சமூக வளர்ந்த நிலையில் சிலர் பகிர்ந்து நக்கலடித்திருக்கிறார்கள்.