Nayagan: டெல்லி கணேஷுக்கு பதில் அந்த நடிகர்!.. கமல் போட்ட கணக்கு.. நடந்ததே வேற!…

நாயகன் படத்தில் நடந்த சம்பவம்..

nayagan

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் பல தோற்றங்களிலும் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். சிறுவன், வாலிபன், முதியவர் என பல கெட்டப்புகளில் இந்த படத்தில் கமல் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் நாயகன் எப்போதும் இருக்கும். இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். நாயகன் படத்தில் இளையராஜா கொடுத்த அனைத்து பாடல்களுமே எவர்கிரீன் ஹிட் பாடலாக இருக்கிறது..

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சரண்யா, ஜனகராஜ், நாசர், கார்த்திகா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் கமலிடம் பணிபுரிபவராக டெல்லி கணேஷ் நடித்திருப்பார். அதாவது, மும்பையில் இருக்கும் தமிழரான கமலுக்கு ஹிந்தி தெரியாது என்பதால் ஹிந்தி தெரிந்த டெல்லி கணேசை கணக்காளராக தன்னுடன் கமல் வைத்திருப்பார். அவரும் கமலுடன் படம் முழுக்க வருவார். அவரை கமல் ‘ஐயரே’ என அழைப்பார்.

இந்நிலையில்தான், இந்த படத்தை தயாரித்த முத்தா சீனிவாசனின் மகள் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘முதலில் இந்த படத்தில் டெல்லி கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஓம் பூரி அல்லது அம்ரிஷ் பூரியை நடிக்க வைக்க வேண்டும் என கமல் நினைத்தார்..

delhi ganesh nayagan

ஏனெனில் கமல் அப்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியிருந்தார். ஹிந்தி மார்க்கெட்டில் கால் பதிக்க கமல் அப்படி யோசித்தார். ஆனால் எனது அப்பா ‘இந்த கதாபாத்திரத்துக்கு டெல்லி கணேஷ் சரியாக இருப்பார்.. அவர் சிறப்பாக நடிப்பார்’ எனக் கூறி கமலை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார்’ என கூறியிருக்கிறார். அந்தப் படத்தில் டெல்லி கணேஷின் நடிப்பை பார்த்த கமல் அதன்பின் தன்னுடைய பெரும்பாலான படங்களில் டெல்லி கணேஷை நடிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →