Kamal: மீண்டும் சண்டியர் தலைப்பை கையிலெடுக்கும் கமல்?!.. பஞ்சாயத்து வருமா?…
கமல்ஹாசனின் புது பட அப்டேட்

நடிகர் கமலின் புதிய திரைப்படம் விரைவில் உருவாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கு சண்டியர் என தலைப்பு வைக்கலாமா என கமல் யோசித்து வருகிறாராம். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு அவர் தான் நடித்த ஒரு படத்திற்கு இந்த தலைப்பு முடிவு செய்யப்பட்டு அறிவி்ப்பும் வெளியானது. ஆனால், அப்போது பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தன. எனவே அந்த படத்தின் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல்..
தற்போது மீண்டும் அந்த தலைப்பை வைக்கலாம் என்கிற எண்ணம் கமலுக்கு வந்துள்ளதாம். தற்போது கமல் திமுக ஆதரவில் எம்.பியாக இருக்கிறார். அதேபோல் திமுக என்கிற பெரிய அரசியல் கட்சி அவருக்கு பின்னால் நிற்கிறது. அதோடு, ஆளும்கட்சியாக தவெக இருக்கிறது. எனவே, இந்த முறை எதிர்ப்பு வந்தாலும் அதை கமல்ஹாசன் சமாளித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












