நடிகர் கார்த்தி – இயக்குநர் பி.எஸ்.மித்ரன் காம்பினேஷனில் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள ஆக்ஷன் படம் தான் ‘சர்தார் 2’.
இப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. நேற்று இதன் ட்ரெய்லர் வெளியானது.
இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி விட்டது. தற்போது, இதன் Jukebox-ஐ யூடியூபில் ரிலீஸ் செய்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம்.சி.எஸ் தான் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இது 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.







