நடிகர் கார்த்தி – இயக்குநர் பி.எஸ்.மித்ரன் காம்பினேஷனில் ரிலீஸ் ஆன ‘சர்தார்’ படத்தின் வெற்றி, இவர்களை மீண்டும் பார்ட் 2 எடுக்க வழி வகுத்தது.
‘சர்தார் 2’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. படத்தை வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
கார்த்தி டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், யோகி பாபு, ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார்கள்.
இன்று இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. தற்போது, ட்ரெய்லரை யூடியூபில் ரிலீஸ் செய்துள்ளனர்.







