’ஹாய்’ ஹானஸ்ட் விமர்சனம்.. கவின், நயன்தாரா ஜோடி பொருத்தம் நல்லா இருக்கா?

X
’ஹாய்’ ஹானஸ்ட் விமர்சனம்.. கவின், நயன்தாரா ஜோடி பொருத்தம் நல்லா இருக்கா?

பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்க நயன்தாரா தயாரித்து நடித்துள்ளார். கவின் டாடா படத்துக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் அவரது 3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு வெளியாகி உள்ள நிலையில், ஓபனிங் வசூல் எல்லாம் பெரிதாக எதிர்பார்க்க முடியாத நிலை உள்ளது.

ஆனால், இந்த வாரம் வெளியான டாக்ஸிக் படத்துக்கு இந்த படம் எவ்வளவோ பரவாயில்லை என இன்று படம் பார்த்து விட்டு ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டால், இந்த வாரம் கொஞ்சம் வசூலை ஹாய் படமும் அள்ளும் என்கின்றனர்.

கட்டாய திருமணத்துக்கு சம்மதிக்காமல் வீட்டை விட்டு ஓடி வரும் தேவயானி தான் நயன்தாரா. காதலிக்கவும் திருமணம் செய்யவும் எந்தவொரு பெண்ணும் கிடைக்காத விரக்தியில், கடைசியில் மாமா பொண்ணுக்கும் வேறு ஒருத்தருடன் நிச்சயம் நடக்க தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுக்கும் மயில்சாமி கவினை தேவயானி நயன்தாரா காப்பாற்றி விட, தேவயானியையே மயில்சாமி காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஆனால், தனது காதலை நட்பாக பழகி வரும் தேவயானியிடமும் சொல்ல அவருக்கு பயம் ஏற்படுகிறது. ஆனால், தேவயானியை கண்டுபிடித்து அவங்க அப்பாவுக்கு கடன் கொடுத்த அந்த கட்டாய திருமணம் செய்து கொள்ள நினைத்த ஆசாமி வர, நயன்தாராவை காப்பாற்றவும் அவரை தன்னுடன் வைத்துக் கொள்ளவும் கவின் சொல்லும் பொய்யும் அதன் பிறகு நடக்கும் கல்யாண கலாட்டாக்களுமே இந்த ஹாய் படம்.

நயன்தாரா, கவின் ஜோடி நல்லாவே உள்ளது. செம ஃபீல் குட் படமாகவும் குடும்பத்துடன் ஜாலியாக சிரித்து மகிழ்ந்து பார்க்கக் கூடிய படமாகவே ஹாய் படத்தை லைட் ஹார்ட்டட் படமாக பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்கி உள்ளார்.

ஏகப்பட்ட படங்களை பார்த்த உணர்வு வருவது படத்துக்கு பலமாகவும் சில இடங்களில் பலவீனமாகவும் மாறுகிறது. ஹாய் படம் ரொம்ப சூப்பரான புது கதை கொண்ட படமென்று எல்லாம் சொல்ல முடியாது. ஆனால், ஜாலியாக பார்க்கக் கூடிய ஒரு பொழுது போக்குப் படமாக நிச்சயம் ரசிகர்களை கவரும்.

ஹாய் – அழகு!
ரேட்டிங் – 3.25/5