நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் ஜெய்லர் 2. இந்தப் படத்தோட கதை இதுதான் என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன். வாங்க என்ன விவரம்னு பார்ப்போம்.
ஜெய்லர் 1ல படத்தோட வில்லன் விநாயக்கை தலைவர் போட்டுத்தள்ளி இருப்பார். அப்போ கூட அவன் எனக்கு மேல ஒருத்தன் இருக்கான்னு சொல்வான். ஆனா அவரு யாருன்னு சொல்ல மாட்டாரு. இந்தப் படத்துல யாருன்னே தெரியாத ஒரு வில்லன் தலைவரைத் தேடிப்பிடிச்சி போட்டுத்தள்ள பிளான் பண்றாரு. அதுக்கு 2 காரணம். நம்மாளைப் போட்டுத் தள்ளுனவனை சும்மா விடக்கூடாது. இன்னொரு காரணம் தலைவர்கிட்ட 3 கண்டெய்னர் சிலை மாட்டிருக்கும். அதை எப்படியாவது கைப்பற்றணும்கறதுதான்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட தலைவரு அவன் நம்மளைத் தேடிப்பிடிச்சி போட்டுத் தள்ளறதுக்குள்ள அவனை நாம தேடிப்பிடிச்சி போட்டுத்தள்ளிற வேண்டியதுதான்னு முடிவு பண்றாரு. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. பர்ஸ்ட் ஆஃப் விறுவிறுப்பு, காமெடியா போனது. அதுக்கு காரணம் முதல் பார்ட்லயே எல்லாத்தையும் சொல்லியாச்சு. கலகலப்பா ஆக்குனது தலைவர், நமோ நாராயணன் காம்பினேஷன்தான். சின்ன சின்ன ஆர்டிஸ்ட் கூட நல்லா நடிச்சி ஸ்கோர் பண்ணிருக்காங்க.
நல்லா பண்ண வேண்டிய கேமியோ டிக்கெட் எல்;லாம் எதுக்கு வந்துருச்சுன்னே தெரியல. அதிலும் ஜாக்கிஷெராப் எல்லாம் சூட்டிங் வந்த அப்பாவி மாதிரி துண்டை போட்டுக்கிட்டு நிக்கிறாரு. ஹிருத்திக் ரோஷன் கேமியோ தேவையில்லன்னாலும் அதை வச்சி ஃபைட் பண்ணிருப்பாங்க. லேடீஸ் பைட் சூப்பர். எஸ்.ஜே.சூர்யா அறிமுகம் சூப்பர். செகண்ட் ஆஃப் சீரியஸ். போர் அடிக்கல. தலைவரைப் பத்தி ஒண்ணு சொல்வாங்க.
அவரு ஸ்பெஷாலிட்டியே அவரு ஏதோ ஒண்ணு செஞ்சிப்புட்டு கூட இருக்குறவனை மாட்டி விட்ருவாருன்னு சொல்வாங்க. கூட இருக்குறவன்தான் மாட்டிக்குவான்னு சொல்வாங்க. அவரு லைஃப் பயோகிராபியவே திருக்குறள் மாதிரி ரெண்டே வரில சொல்லிட்டாங்க. இது தலைவருக்கு தெரிஞ்சி வச்சாங்களா, இல்லையான்னுதான் தெரியல. டெக்னிகலா மேக்கிங் ஸ்ட்ராங்;க். கேமரா ஒர்க் சூப்பர். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் தலைவருக்கு இது சூப்பர் படம்.
எல்லாருக்குமான வெற்றிப்படம். படத்தோட ஒண்ணாம் பாகத்தைப் பார்த்தா தான் இதைப் பார்க்க முடியும் என்கிறார் புளூசட்டைமாறன். மேலும், படத்தைப் பற்றி நெகடிவ் விமர்சனம் போட முடியாம கையைக் கடிச்சிட்டு உட்கார்ந்துருக்காங்க சோஷியல் மீடியால. அவங்களுக்கு ஒண்ணு சொல்லலாம். பல வருஷமா தலைவரு பிளாப் படம்தான கொடுத்துக்கிட்டு இருந்தாரு. நம்ம அண்ணன் ஆட்சியில சூப்பர்ஹிட் கொடுத்துருக்காரு. இதுக்கு எல்லாம் யார் காரணம்? நம்ம அண்ணன்தான் காரணம்னு லேபிளை ஒட்டிட வேண்டியதுதான் என்கிறார் புளூசட்டைமாறன்.







