அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயாடு லோஹர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட கயாடு லோஹர் 2021ம் வருடம் வெளியான கன்னட திரைப்படமான முகில்பேட்ட என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

அதன்பின் மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே கயாடு லோஹரின் திரைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அவருக்கென ரசிகர்களை உருவாக்கியது. இதற்காக கயாடு லோஹர் இன்ஸ்டாகிராமில் நன்றியும் தெரிவித்தார்.

அதன்பின் அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி படத்தில் நடித்தார். தற்போது ஜிவி பிரகாஷுடன் இணைந்து இம்மார்ட்டல் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மஞ்சனத்தி என்கிற படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினி நடித்தவரும் தர்மன் திரைப்படத்தில் கயாடு லோஹர் ஒரு பாடலுக்கு நடனமாடவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.. ஆனால் அவர் அதை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், கவர்ச்சியாக சேலை இணைந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கொடுத்திருக்கிறார்..







