மகன்களுக்கு இளையராஜா கொடுத்த சுதந்திரம்..! என்ன ஒரு பெருந்தன்மை!

X
மகன்களுக்கு இளையராஜா கொடுத்த சுதந்திரம்..! என்ன ஒரு பெருந்தன்மை!

திரை இசையைப் பொருத்தவரை யாரும் தொட முடியாத பல உயரங்களைத் தொட்ட சாதனையாளர்தான் இளையராஜா. இசைத்துறையில் அடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் அவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இசைத்துறையில் அவர் செய்த பல அற்புதங்கள்தான்.

அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா இருவருமே இன்றைக்கு இசை அமைப்பாளர்களாக தமிழ்சினிமா உலகிலே வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த இருவரைப் பற்றியும் தந்தை என்ற முறையில் இளையராஜாவின் மதிப்பீடு என்ன? ஒரு பத்திரிகை பேட்டியில் இதைப் பற்றி பகிர்ந்துள்ளார் இளையராஜா.

கார்த்திக் ராஜா மிகவும் புத்திசாலி. இசையில் அவனுடைய அணுகுமுறை வித்தியாசமானது. மற்றவர்கள் வெகுநேரம் எடுத்துக் கொண்டு செய்கிற வேலையை அவன் சில மணி நேரங்களில் முடித்து விடுவான். யுவன் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எல்லாம் அவனுக்கு வரும். அப்படி ஒரு அமைப்பு உள்ளவன் அவன்.

கல்லூரிக்கு சென்று படிக்கும் வாய்ப்பு இருந்தும் இருவரும் கல்லூரியில் படிக்காமல் இசையில் மட்டுமே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள். ஒரு தகப்பனாக நான் அவர்களுக்குத் தந்தது இந்த சுதந்திரம். தங்களுடைய அடையாளத்தைத் தேடி பாதைகளைக் கண்டுபிடிக்க வேண்டியவர்கள் அவர்கள்தான் என்று அதில் குறிப்பிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.