தேவா சொன்ன டவுன் பஸ் சாங்ஸ்… அடடா மிஸ் பண்ணிட்டோமே!

X
தேவா சொன்ன டவுன் பஸ் சாங்ஸ்… அடடா மிஸ் பண்ணிட்டோமே!

தமிழ்த்திரை உலகில் தேனிசைத் தென்றல் என்று ரசிகப்பெருமக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் தேவா. இவர் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ரகங்கள்தான். இவர் ரஜினிக்கே சூப்பர்ஸ்டார் என்று டைட்டில் கார்டு போட்டு அசத்தியவர். அண்ணாமலை படத்தில் தான் அந்த ஆச்சரியமான அற்புதம் நடந்தது.

அது ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் கானா பாடல்களைப் பாடுவதில் கொடிகட்டிப் பறந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். அவர் காலமானது தமிழ்த்திரை உலகிற்கே பேரிழப்பு. அவர் தன் இசை குறித்து ஒரு ஆச்சரியமான தகவல்களை இப்படி பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

இப்போ நான் லைவ் ரெக்கார்ட்ஸ் பண்றதுக்கு வெளிநாடுகளுக்கு எல்லாம் போகிறேன். இப்ப தான் அவர்களுக்கு இது தேவா சாங் என்று தெரிகிறது. நிறைய பேருக்கு என் மெலடி தெரியல.

அது மாதிரி வேற யாரோ கானா பாடுறதை தேவா பாடுறதுன்னு சொல்றாங்க. அதாவது காலத்துக்கும் அழியாதது மெலடி பாடல். அதனால எனக்கு அதுல பேரு கிடைக்க மாட்டேங்குறது வருத்தம். தூதுவளை இலை அரைச்சின்னு ஒரு பாடல். அது டவுன் பஸ் சாங். ஒரு ஜோக் ஒண்ணு போடுவாங்க. இப்பல்லாம் டவுன்பஸ்ல பாடல்கள் போடுறது இல்லைன்னு சட்டம் போட்டுட்டாங்கன்னு வரப்போகுதுன்னு ஒருவர் சொல்கிறார்.

இன்னொருவர் யப்பா தூதுவளை இலை அரைச்சி இருக்கே யப்பா யப்பான்னு காதைப் பொத்துகிறார். அது பார்க்கும்போது காமெடியா இருந்தாலும் சந்தோஷமா இருக்கு. ஏன்னா அத்தனை வாட்டி அதை போட்டுருக்காங்க. முத்துநகையே முழுநிலவே எல்லாம் டவுன்பஸ் சாங் என்கிறார் தேனிசைத் தென்றல் தேவா.