கேஜிஎஃப் 2வை விட 100 கோடி கம்மியா வசூல் பண்ண டாக்ஸிக்!

X
கேஜிஎஃப் 2வை விட 100 கோடி கம்மியா வசூல் பண்ண டாக்ஸிக்!

யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. ‘கே.ஜி.எஃப் 2’ பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி மிகப் பெரிய வசூல் சாதனை செய்தது.

இதனாலேயே யாஷின் புதிய படமான ‘டாக்ஸிக்’-கிற்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருந்தது. கூடவே இப்படத்தின் ட்ரெய்லர் இன்னும் கொஞ்சம் ஹைப்பை ஏற்றி விட்டது.

நேற்று முன்தினம் தான் இந்த படம் தியேட்டர்களில் வெளியானது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.

இது கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.190.10 கோடி தான் வசூல் செய்திருக்கிறது. ‘கே.ஜி.எஃப் 2’ முதல் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.293.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.