Cinema News
அந்த பொண்ணு கொடுத்து வச்சவங்களா?!.. குஷ்பூ தன் மகளை கட்டிக் கொடுப்பாரா!… பொங்கிய பிரபலம்!…
நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பிரபல விமர்சகர் கிருஷ்ணவேல் பேட்டியில் பேசியிருக்கின்றார்.
சோசியல் மீடியாவில் தற்போது டாக்காப் தி டவுனாக இருப்பது நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் தான். நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கும், நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: போட்டோகிராபரிடம் எறிஞ்சி விழுந்த ரஜினி… சாயங்காலம் ஆனா அவருக்கு மூடே மாறிடுமாம்….!
தமிழ் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக திருமணத்தை செய்து வைத்திருந்தார் நடிகர் நெப்போலியன். மேலும் தமிழ் சினிமாவை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் ஜப்பானுக்கு சென்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள். நடிகை ராதிகா, சரத்குமார், குஷ்பூ, மீனா, கலா மாஸ்டர், சுகாசினி, நடிகர் கார்த்திக் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு நெப்போலியன் விமர்சையாக திருமணம் செய்து வைத்தாலும் பலரும் பல விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். அதிலும் சமூக ஆர்வலரும் விமர்சகர்மான கிருஷ்ணவேல் சமீபத்தில் தான் கொடுக்கும் பேட்டிகளில் இந்த திருமணம் குறித்து மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது அவர் கொடுத்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருந்ததாவது ‘நெப்போலியன் தனது மகனுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கின்றது என்பதை தெரிந்து எப்படி ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றார். மகனுக்கு நர்சு தான் தேவை, ஒரு பொண்டாட்டி தேவை இல்லை. அவரை கவனித்துக் கொள்வதற்கு ஒரு செவிலியரை ஏற்பாடு செய்யாமல் அதை விட்டுவிட்டு தனது பணத்திமிரை காட்டுவதற்காக இப்படி ஒரு திருமணத்தை செய்து வைத்திருக்கின்றார்.
அந்தப் பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் அழித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். அது எப்படி ஒரு பெண் நம் வாழ்நாள் முழுவதும் இப்படி ஒரு வாழ்க்கையை தான் வாழ போகிறோம் என்பதை தெரிந்து ஒப்புக்கொள்வார். அவரது பெற்றோர்களின் கட்டாயத்தால்தான் அந்தப் பெண் நிச்சயம் ஒப்புக்கொண்டிருப்பார்.
இதையும் படிங்க: Bloody Beggar: பிளடி பெக்கர் லாஸ்… யோசிக்காமல் நெல்சன் செய்த செம மேட்டர்… நீங்க கிரேட்டு சார்…
மேலும் குஷ்பூ, மீனா போன்றவர்கள் திருமணத்திற்கு பிறகு பேட்டியில் கூறும் போது அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவர் மிகச் சிறந்த குடும்பம் கிடைத்திருக்கின்றது என்றெல்லாம் பெருமையாக பேசி இருந்தார்கள். அப்படி பேசும் குஷ்பூ தனது மகளை தனுஷுக்கு திருமணம் செய்து வைத்திருக்க வேண்டியது தானே’ என்று பல்வேறு விமர்சனங்களை கூறியிருக்கின்றார் விமர்சகர் கிருஷ்ணவேல்.