வெண்ணக் கட்டியில செஞ்ச உடம்பா இது!.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் கீர்த்தி ஷெட்டி!..
Krithi shetty: கர்நாடகா தனது பூர்வீகமாக இருந்தாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் கீர்த்தி. எனவே, ஹிந்தி படங்களில் வாய்ப்பு தேடினார். ஒரு படத்தில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் போனார். அங்கு, உப்பன்னா என்கிற படத்தில் அறிமுகமானார்.
இதுதான் விஜய் சேதுபதி நடித்த முதல் தெலுங்கு திரைப்படமாகும். இந்த படம் தமிழில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் கதையை ஒட்டி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட் அடித்தது. எனவே, கீர்த்தி ஷெட்டிக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது.
நானியுடன் ஷ்யாம் சிங்க ராய் என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி. அதேபோல், லிங்குசாமி ஆந்திராவில் போய் இயக்கிய தி வாரியர் படத்திலும் நடித்திருந்தார். மேலும், வெங்கட்பிரபு தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்கிய கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.
அதோடு, டோவினோ தாமஸ் நடிப்பில் உருவான மலையாள படமான ஏ.ஆர்.எம் படத்திலும் நடித்திருந்தார். தற்போது தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். கார்த்தி நடித்து வரும் வா வாத்தியார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வாரும் எல்.ஐ.சி, ஜெயம் ரவியிடன் ஜெனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் வெற்றி பெற்றால் தமிழில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போது பால் மேனி அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் புதிய புகைப்படங்கள் இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.