Connect with us

கண்ணப்பா படத்துக்கு பெரிய வில்லனே தனுஷ் தானாம்!.. குபேரா வெற்றியால் வசூலில் டல் அடிக்குதாம்!..

latest news

கண்ணப்பா படத்துக்கு பெரிய வில்லனே தனுஷ் தானாம்!.. குபேரா வெற்றியால் வசூலில் டல் அடிக்குதாம்!..

விஷ்ணு மஞ்சு சொந்த காசு போட்டு பிரபாஸ் போல பான் இந்தியா ஸ்டாராக மாற எடுத்த படம் தான் கண்ணப்பா. இந்த படத்தில் அக்‌ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், சரத்குமார், அப்பா மோகன்பாபு என அனைவரையும் கூட்டு சேர்ந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி கங்குவா படம் போலவும் 2வது பாதி தான் பக்திப் படமாக மாறுகிறது. ஆனாலும், படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருவதை பார்த்து படக்குழுவே ஷாக் ஆகிவிட்டனர்.

முன்னதாக எச்சரிக்கை எல்லாம் விடுத்தது எல்லாம் தேவையற்ற வேலை என படக்குழுவே நினைத்திருப்பார்கள். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு தெலுங்கு மற்றும் இந்தியில் பெரிதாக தேறவில்லையாம்.

தமிழ்நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கண்ணப்பா படத்துக்கான ஷோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் என பல படங்கள் வரிசை கட்டியுள்ள நிலையில், இங்கேயும் வசூல் வரவில்லையாம்.

தெலுங்கில் எப்படியிருந்தாலும் படத்தை ஓட்டிவிடலாம் என நினைத்த விஷ்ணு மஞ்சுவுக்கு பெரிய வில்லனாக மாறியிருப்பதே தனுஷின் குபேரா படம் தான் என்கின்றனர். முதல் நாளில் 20 கோடிக்கும் மேல் வசூல் வரும் என எதிர்பார்த்த படக்குழுவுக்கு 9 கோடி தான் வந்தது வயித்துல புளியை கரைத்திருக்கிறது.

சனிக்கிழமை இதுவரை 3.5 கோடி வரை தான் வசூல் வந்திருக்கிறதாக கூறப்படுகிறது. நைட் ஷோவுடன் சேர்த்தாலும் 5 கோடி ரூபாய் வசூலை தாண்டுவது சிரமம் தான் என்கின்றனர். 200 கோடி பட்ஜெட் என்றெல்லாம் சொல்றாங்க. முதல் நாளே 40 கோடிக்கு மேல் வசூல் செய்தாலோ, அல்லது 2வது நாளில் இருந்து வசூல் அதிகரித்தாலோ தான் லாபம் வரும் என்கின்றனர். சன் டே வசூல் அதிகரித்தால் மட்டுமே கண்ணப்பாவை காப்பாற்ற முடியும் என்கின்றனர். அந்த சிவபெருமான் தான் அருள் புரிய வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top