Connect with us

மைக்செட் ஸ்ரீராமை ஞாபகமிருக்கா!.. ஹீரோ ஆகுறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிட்டாரே!..

latest news

மைக்செட் ஸ்ரீராமை ஞாபகமிருக்கா!.. ஹீரோ ஆகுறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிட்டாரே!..

யூடியூபர் ஸ்ரீராம் நகைச்சுவை மற்றும் ப்ராங்க் வீடியோக்களை தனது மைக் செட் சேனலில் பகிர்ந்து பிரபலமான நிலையில் இன்று பாண்டிச்சேரி கடற்கரை அருகில் உள்ள ரெசாட்டில் அவரது திருமணம் முடிந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்ரீராம் இந்த சேனலை ஒரு சிறிய குழுவுடன் இயக்கி வந்தார். மேலும், அந்த சேனலில் ஏற்பட்ட விரிசல் குறித்து வதந்திகள் வந்தபோது, ஸ்ரீராம் அதை மறுத்து, குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வேலை செய்வதாகவும், புதிய சேனல்களை உருவாக்குவதாகவும் தெரிவித்திரிந்தார்.

மைக் செட் சேனலின் ஆரம்ப காலத்தில் தொழில்நுட்ப வேலைகளுக்கு ஆள் கிடைக்காததால், ஸ்ரீராம் யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு அனைத்து பணிகளையும் தானே செய்துள்ளார். காப்பிரைட் பிரச்னைகள் காரணமாக சேனலில் இருந்த அனைத்து வீடியோக்களையும் ஸ்ரீராம் நீக்கியதாக தெரிவித்தார், ஏன் என்றால் மூன்றாவது காப்பிரைட் புகார் வந்தால் சேனல் மூடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.

ஸ்ரீராம் யூடியூப் மூலம் பெற்ற புகழைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். மேலும், அவர் சந்தானத்தின் மச்சான் தயாரிப்பில் ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அந்த புகைப்படங்கள் படக்குழுவுடன் இணையத்தில் வைரலானது. அதையடுத்து ப்ளாக் ஷிப் தயாரிப்பில் ராஜ் மோகன் இயக்கும் ‘புட் சட்னி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரீராம் ராஷிகா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இன்று பாண்டிச்சேரி பீச்சில் நடைப்பெற்ற அவரது திருமணத்தின் வீடியோ சற்று முன் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பலரும் அவருக்கு திருமண வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top