மாஸ் ஹீரோவாதான தெரியும்.. பெர்ஃபார்மரா விஜய் கலக்கிய திரைப்படங்கள்

by ராம் சுதன் |
மாஸ் ஹீரோவாதான தெரியும்.. பெர்ஃபார்மரா விஜய் கலக்கிய திரைப்படங்கள்
X

மாஸ் ஹீரோ: ஒரு மாஸ் ஹீரோவாக ஸ்டைலிஷான ஹீரோவாக நல்ல டான்ஸராக மட்டுமே தெரிந்த விஜய் பெர்ஃபார்மராக கலக்கிய பல திரைப்படங்கள் இருக்கின்றன. ஆனால் அந்தத் திரைப்படங்கள் பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை. அப்படி அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்த திரைப்படங்கள் பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

கடுமையான விமர்சனம்: 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆரம்பத்தில் பல கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அதில் ஒரு பத்திரிக்கையில் தேவாங்கு மாதிரி முகம் என கடுமையாக விமர்சித்ததை பார்த்து மிகுந்த மனவேதனையில் இருந்தார் விஜய். தன்னுடைய முதல் படத்தில் இப்படி ஒரு விமர்சனத்தை வாங்கிய அந்த 20 வயது நடிகர் தான் இன்று பெஸ்ட் லுக்கிங் நடிகர் என்ற பெயரையும் வாங்கி இருக்கிறார். முழுக்க முழுக்க தன்னைத் தானே செதுக்கி இன்று இந்த இடத்தை அடைந்திருக்கிறார் விஜய்.

நல்ல பெர்ஃபார்மர்: நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய் மாணவன், ரசிகன் என தொடர்ந்து பல படங்களை கொடுத்தாலும் பூவே உனக்காக திரைப்படத்தில் ராஜா என்ற கதாபாத்திரத்தில் ஒரு நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுத்து மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். தனது காதலை சொல்லாமலேயே விட்டுக் கொடுக்கிற வலியாலும் சுகத்தாலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார் விஜய்.என்னதான் ஒரு படத்தில் டயலாக் பெரிய அளவில் இருந்தாலும் அதை பெர்ஃபார்ம் பண்ணுகிறவர்களால் மட்டும் தான் அந்த டயலாக் மக்களிடையே நல்ல ஒரு ரீச் ஆகும்.

ஜீவா மினி காதல்: அதை இந்த படத்தில் விஜய் நன்றாக பயன்படுத்தி இருப்பார். நேருக்கு நேர் திரைப்படம். இதில் விஜயை விஜயாகவே நடிக்க வைத்திருப்பார் அந்த படத்தின் இயக்குனர் வசந்த். தம்பியாக ரகுவரனிடம் பழகும் விதம், காதலனாக கௌசல்யாவிடம் பழகும் விதம், சூர்யாவுடன் மோதுகிற காட்சி விஜயின் பெர்ஃபார்மன்ஸ்க்கு நேருக்கு நேர் திரைப்படம் ஒரு மைல்கல். இந்த தலைமுறை காதலுக்கு எப்படி கார்த்திக் ஜெசியோ அதைப்போல கடந்த தலைமுறையினருக்கு ஜீவா மினி.

ஐகானிக் திரைப்படம்: அப்படி ஒரு ஐகானிக் திரைப்படம் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் விஜயின் பெர்ஃபார்மன்ஸ் இன்றுவரை நின்னு பேசக்கூடியதாக இருக்கின்றது. விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் ஒரு ஆணித்தரமாக சொன்ன படம் காதலுக்கு மரியாதை .காதலித்து இறந்து போகிறவர்கள் ,தற்கொலை செய்து கொள்கிறவர்கள் மத்தியில் காதலை மிகவும் எதார்த்தமாக சொன்ன திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை.

அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்த பிரியமுடன் திரைப்படத்தில் எந்த ஒரு பெரிய நடிகரும் செய்யாத ஒரு காரியத்தை விஜய் செய்தார். நெகட்டிவ் ரோலில் இந்த படத்தில் நடித்து தன்னுடைய பெர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தி இருப்பார். ரொம்ப நாளாக ஒரே மாதிரியாக நடித்துக் கொண்டு வருகிறார் விஜய் என்ற விமர்சனத்தை முற்றிலுமாக தகர்த்தெறிந்த திரைப்படமாக பிரியமுடன் திரைப்படம் அமைந்தது.

பிரியமுடன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல பெர்ஃபார்மர் விஜய் என்று சொல்ல வைத்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். தன் அம்மா இறந்து போனதை யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே போட்டு அழும் விஜயின் அந்த தருணம் கலங்காதவர்களையும் கலங்க வைத்தது. இந்த படத்திற்கு பிறகு 2000 ஆண்டு வெளிவந்த திரைப்படம் கண்ணுக்குள் நிலவு .தலையில் அடிபட்டு பாதிக்கப்பட்ட ஒரு கேரக்டராக இந்த படத்தில் விஜய் நடித்திருப்பார். இந்த படத்தில் ஒரு அல்டிமேட் ஆன பெர்பார்மன்சை கொடுத்திருப்பார் விஜய். விஜயால் ஆட மட்டும்தான் முடியும். ஆக்‌ஷன் மட்டும்தான் காட்ட முடியும் என்று இல்லாமல் அவருக்குள் சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதை காட்டிய திரைப்படங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

Next Story