தமிழ் சினிமாவின்தொடர் வெற்றியை கொடுத்துகொண்டிருக்கும் பிரதீப் ரங்க நாதனின் அடுத்த படமாக LIK வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திர்டையுலகில் வேகமாக முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நாயகனா நடிக்க , முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் தான் LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி)
பொதுவாக விக்னேஷ் சிவன் படங்களில் காதல் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். அந்த வகையில், உண்மையான காதல் என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்ட எதிர்கால உலகத்தில், ஒரு இளைஞன் தனது காதலைக் காப்பாற்றிக் கொள்ள எப்படிப் போராடுகிறான் என்பதே இதன் மையக் கதைக்களம்.
அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான “தீமா தீமா”, “பட்டும்மா” மற்றும் “எனக்கென யாருமில்லையே” ஆகிய சிங்கிள் பாடல்கள் ஹிட்டடித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து வெளியான படத்தின் டீசரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.
இந்த நிலையில் LIK படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வ்ருகிற ஏப்.3ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. ஏற்கெனவே ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு தற்போது ஏப்.3ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுத்துள்ளது.





